தேசிய நெடுஞ்சாலை 209 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 209 தென்னிந்தியாவிலுள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கர்நாடகத்தின் பெங்களூரு நகரின் பசவனகுடியிலுள்ள திவான் மாதவ் ராவ் சாலையில் துவங்கி தமிழ்நாட்டின் திண்டுக்கல்லுக்கு வடக்கே வேடசந்தூரில் தே.நெ.7இல் இணைகிறது. இந்தச் சாலை காவிரி ஆற்றை மாலவல்லிக்கும் சட்டேகாலுக்கும் இடையே கடக்கிறது. இந்தச் சாலை கோயம்புத்தூருக்கும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்திற்கும் இடையே சத்தி சாலை எனப்படுகிறது. இது கோவை மாவட்டத்திலுள்ள முதன்மையான சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது.[1] வழித்தடம்தமிழ்நாடுஅசனூர், பண்ணாரி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர்(கோவையின் புறநகர்), கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் (கோவை மாவட்ட எல்லை), பழனி மற்றும் திண்டுக்கல். கர்நாடகம்புஞ்சனூர், சாமராஜநகர், யெலந்தூர், கொள்ளேகால், சட்டேகால், மாலவல்லி, அல்கூர், கனகப்புரா, அரோஹல்லி, கக்ளிப்பூர், பெங்களூரு காட்சிக்கூடம்
சான்றுகோள்கள் |
Portal di Ensiklopedia Dunia