முதல்வர் மகாத்மா
முதல்வர் மகாத்மா (Mudhalvar Mahatma (இப்படம் Welcome Back Gandhi என்றும் அறியப்படுகிறது) என்பது ஏ. பாலகிருஷ்ணன் இயக்கிய, 2012 ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இப்படமானது 2014 சனவரி 30 அன்று ஆண்டு வெல்கம் பேக் காந்தி என்ற பெயரில் இந்தியில் வெளியானது.[2] இப்படத்தில் மகாத்மா காந்தியாக எஸ். காமராஜ் நடித்துள்ளார்.[3] இப்படத்தில் பாடல் வரிகளை பரத் ஆச்சார்யா எழுத, இளையராஜா இசையமைத்துள்ளார். காந்தி இன்னும் உயிருடன் இருந்திருந்தால் அல்லது நவீன இந்தியாவுக்கு மீண்டும் வந்தால் எப்படி நடந்துகொள்வார் என்பதாக இத்திரைப்படத்தின் கதை உள்ளது.[4] பட வெளியீட்டுக்குப் பிறகு படத்தின் எட்டு பாடல்கள் வெளியிடப்பட்டன. முதல்வர் மகாத்மா படத்தின் படப்பிடிப்பானது 2012இல் சென்னையில் 40 நாட்கள் நடந்தன. படமானது மூன்று கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.[5][6] கதை60 ஆண்டு காலத்திற்கு பிறகு, காந்தி (எஸ் கனகராஜ்) தனது சத்தியாக்கிரக இயக்கத்தை மீண்டும் தொடர இந்தியாவுக்கு திரும்புவதும், அதனால் ஏற்படும் நிகழ்வுகளுமே கதை.[7] நடிகர்கள்
வரவேற்புதி இந்து பத்திரிக்கையானது முதல்வர் மகாத்மா படத்துக்கு நேர்மறையான விமர்சனத்தை அளித்தது. "இப்படம் உன்னதமான, துணிச்சலான முயற்சி, இதுபோன்ற ஒரு நேர்மையான திரைப்படத்தில் முதலீடு செய்த திரைப்பட தயாரிப்பாளரை பாராட்ட வேண்டும்" என்றது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia