லஷ்மி மூவி மேக்கர்ஸ்
லஷ்மி மூவி மேக்கர்ஸ் (Lakshmi Movie Makers)[1] என்பது கே. முரளிதரன், வி. சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் தலைமையிலான ஒரு இந்தியத் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும்.[2] வரலாறு1990களின் நடுப்பகுதியில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. கோகுலத்தில் சீதை (1996) மற்றும் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (1998) போன்ற லாபகரமான படங்களைத் தயாரித்தது.[3] தயாரிப்பாளர்களில் ஒருவரான வி. சுவாமிநாதன் எப்போதாவது தனது தயாரிப்புகளில் கேமியோ தோற்றங்களில் தோன்றினார்.[4] தயாரிப்பாளர் வி. சுவாமிநாதனின் மகன் அஷ்வின் ராஜா பாஸ் என்கிற பாஸ்கரன் (2010) படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் நகைச்சுவை வேடங்களில் தோன்றினார்.[5][6] 2010களின் முடிவில், தமிழ் திரையுலகில் இயக்க செலவுகள் அதிகரித்து வருவதால் திரைப்பட நிறுவனம் பெரும்பாலும் செயலற்ற நிலையிலிருந்தது.[7] திரைப்படவியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia