லியோபோல்டு மேன்டிக்புனித லியோபோல்டு மேன்டிக் கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர் ஆவர். ஓப்புரவு திருவருட்சாதனத்தால் மக்களின் மனதில் நிலைத்தவர்.
புனித லியோபோல்டு மேன்டிக் இத்தாலியிலுள்ள தல்மத்திய பகுதியில் கேசில்நோவாவிற்கு அருகிலுள்ள மோந்தேநேக்ரோ (இன்று ஹெர்சக்நோவி) என்ற ஊரில் தியோதெத்ஸ் 1866 மே 12 இல் பிறந்தார். மொழியால் குரோசி இனத்தைச் சார்ந்தவர். தியோதெத்ஸ் திருமுழுக்கு பெயர் போக்தான் ஜான் மேன்டிக். தல்மத்திய பகுதியில் இறைபணியாற்றிய கப்புச்சின் துறவிகளின் எளியவாழ்வால் ஈர்க்கப்பட்டு கப்புச்சின் சபையில் இணைந்து செப்டம்பர் 20, 1890 இல் குருவாக அருட்பொழிவுச் செய்யப்பட்டார். தனது சொந்த நாடு அமைந்த குரோசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மறைபணி செய்ய ஆவல் கொண்டார் ஆனால் இவரது பலவீனமான உடல் அமைப்பு இடம் தரவில்லை. எனவே முதலில் சாரா என்ற துறைமுக நகரில் அமைந்த கப்புச்சின் இல்லத் தலைவராக நியமிக்கப்பட்டார்.அடிக்கடி நோய்வாய்பட்டதால் 1906 ஆம் ஆண்டு முதல் புனித அந்தோணியார் கல்லறை அமைந்த பதுவா திருத்தலப் பேரலாயத்திற்கு ஓப்பரவு அருட்சாதனம் வழங்க நியமிக்கப்பட்டார். இப்பணியை தனது வாழ்நாள் முழுவதும் செய்தார். இவரிடம் ஓப்பரவு பெற்றவர்கள் இறை ஞானத்தையும், இறை ஆசிரையும், மன்னிப்பையும் அபரிவிதமாக பெற்றதை உணர்ந்தனர். 1.35 மீட்டர் உயரம் மட்டுமே கொண்ட இவர் இறைவாழ்வில் மிகவும் உயரமான நிலையை கொண்டிருந்தார். கீழைத் திருச்சபையும், உரோமைத் திருச்சபையும் இணைந்து திருத்தந்தையின் கீழ் ஒரே குடையாக செயல்பட வேண்டுமென்று தனது வாழ்வை இப்புனித பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டார். ரஷ்யா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் இருந்த கீழைத் திருச்சபையினர் "ஒரு நாள் உரோமைத் திருச்சபையோடு இணைந்து செயல்படுவர்" எனத் தீர்கதரிசனம் கூறினார். தந்தையின் உழைப்பு, செபம் வீண்போகவில்லை. திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் கீழைத்திருச்சபையின் பிதாபிதா ஆகிய இருவரும் முதன் முறையாக தந்தை லியோபோல்டு கல்லறை அமைந்த பதுவை நகரில் 1976 இல் சந்தித்துக் கொண்டனர். தனது புனித வாழ்வால் அனைவருக்கும் இறைபணி ஆற்றிய லியோபோல்டு தனது 76 வது வயதில், 1942 ஜூலை 30 அன்று இவ்வுலக வாழ்வை விட்டு அகன்றார். திருத்தந்தை ஆறாம் பவுல் 1976 மே 2 இல் அருளாளர் நிலைக்கு உயர்த்தி, திருச்சபை ஒன்றிப்பின் பாதுகாவலர் என அறிவித்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1983, அக்டோபர் 16 அன்று புனிதர் நிலைக்கு உயர்த்தினார். சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia