இயமம் மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகநெறியும் முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும். இயமமும் நியமமும் திருமூலர் குறிப்பிடும் எட்டு வகை யோகங்களில் இரண்டு ஆகும்.
சாண்டிலிய மற்றும் வராக உபநிடதங்களும் , திருமூலரின் திருமந்திரத்திலும் பத்து இயமங்களும், பதஞ்சலி முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன.[ 1] [ 2]
ஐந்து இயமங்கள்
பதஞ்சலி முனிவர், தன் யோக சூத்திரம் 2.30 இல் குறிப்பிடும் இயமங்கள்[ 3]
கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.[ 4]
வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்[ 4] [ 5]
கள்ளாமை (अस्तेय): அஸ்தேய களவு செய்யாமை[ 4]
காமம் கடத்தல் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம் , துணைக்கு துரோகம் இழைக்காமை[ 5]
அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[ 4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[ 5]
பத்து இயமங்கள்
சாண்டிலிய உபநிடதம்[ 6] மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல்[ 7] [ 8] [ 9] ஆகியன வருவனவாற்றைப் பத்து இயமங்கள் என்கின்றன:
கொல்லாமை (अहिंसा): அகிம்சை
வாய்மை (सत्य): சத்யம்
கள்ளாமை (अस्तेय): அஸ்தேயம்
புலனடக்கம் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம்
பொறையுடைமை (क्षमा): க்ஷமை - மன்னிக்கும் தன்மை[ 10]
வெஃகாமை (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[ 4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[ 5]
வஞ்சனையின்மை (धृति): த்ருதி - திடமான மனது
இரக்கம் (दया): கருணை[ 10]
நேர்மை (आर्जव): (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை[ 11]
அளவுணவு (मितहार): மிதாகாரம் - போதுமான உணவு
தூய்மை (शौच): சௌச்சம், புனிதம் பேணல்.
இயமங்களின் வேறுபட்ட எண்ணிக்கை
அறுபதுக்கும் மேலான இந்து மெய்ஞ்ஞானப் பழநூல்கள், இயமம் பற்றி விவாதிக்கின்றன.[ 12] எனினும் பொதுவாக, இயமங்கள் பத்து என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.[ 12]
மேலும் பார்க்க
அடிக்குறிப்புகள்
↑ Ramaswami, Sŕivatsa (2001). Yoga for the three stages of life . Inner Traditions / Bear & Company. p. 229. ISBN 978-0-89281-820-4 .
↑ Devanand, G. K. Teaching of Yoga . APH Publishing. p. 45. ISBN 9788131301722 . கடயோகப் பிரதீபிகை முதலான நூல்கள் பத்து இயமங்களைக் குறிப்பிடும்போதும், பதஞ்சலி முனிவர் ஐந்தைந்து இயம-நியமங்களைக் குறிப்பிடுகின்றார்.
↑ Āgāśe, K. S. (1904). Pātañjalayogasūtrāṇi . Puṇe: Ānandāśrama. p. 102.
↑ 4.0 4.1 4.2 4.3 4.4 James Lochtefeld, "Yama (2)", The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, Rosen Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780823931798 , page 777
↑ 5.0 5.1 5.2 5.3 Arti Dhand (2002), The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism, Journal of Religious Ethics, 30(3), pages 347-372
↑ KN Aiyar (1914), Thirty Minor Upanishads, Kessinger Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1164026419 , Chapter 22, pages 173-176
↑ Svātmārāma; Pancham Sinh (1997). The Hatha Yoga Pradipika (5 ed.). Forgotten Books. p. 14. ISBN 978-1-60506-637-0 . அத யம-ந்யம:
அஹின்ஸா சத்யாமாஸ்தேயம் ப்ரஹ்யசார்யமா க்ஷமா த்ரிதி:
தயார்ஜவம் மிதாஹார: சௌச்சமா சைவ யம தச 17
↑ Lorenzen, David (1972). The Kāpālikas and Kālāmukhas . University of California Press. pp. 186 –190. ISBN 978-0-520-01842-6 .
↑ Subramuniya (2003). Merging with Śiva: Hinduism's contemporary metaphysics . Himalayan Academy Publications. p. 155. ISBN 978-0-945497-99-8 . Retrieved 6 April 2009 .
↑ 10.0 10.1 Stuart Sovatsky (1998), Words from the Soul: Time East/West Spirituality and Psychotherapeutic Narrative, State University of New York, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0791439494 , page 21
↑ J Sinha, Indian Psychology , p. 142, கூகுள் புத்தகங்களில் , Volume 2, Motilal Banarsidas, இணையக் கணினி நூலக மையம் 1211693 , page 142
↑ 12.0 12.1 SV Bharti (2001), Yoga Sutras of Patanjali : With the Exposition of Vyasa, Motilal Banarsidas, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120818255 , Appendix I, pages 672-680