1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்1972 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முனிச் நகரில் ஆகத்து 26 முதல் செப்தெம்பர் 11 வரை 1972ம் ஆண்டு நடந்த கோடைக்கால ஒலிம்பாகும். இது XX ஒலிம்பியாட் என அழைக்கப்படுகிறது. இது மேற்கு செருமனியின் முனிச் நகரத்தில் நடக்கும் இரண்டாவது ஒலிம்பிக்காகும். முதல் ஒலிம்பிக் 1932ம் ஆண்டு பெர்லின் நகரில் நடந்தது. இப்போட்டி முனிச் படுகொலையால் பாதிக்கப்பட்டது. இப்படுகொலையில் 11 இசுரேலிய வீரர்களும் பயிற்சியாளர்களும் காவல்துறையினரும் ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் மூவர் உயிருடன் பிடிபட்டனர்.[1] பதினொரு நாடுகள் முதன்முறையாக முனிச் ஒலிம்பிக்கின் போது பங்கு கொண்டன. அவை அல்பேனியா, சவுதி அரேபியா, சோமாலியா, வட கொரியா, டாகோமெ (தற்போது பெனின்), காபோன், புர்க்கினா பாசோ, டோகோ, மலாவி, லெசோத்தோ, சுவாசிலாந்து. பங்குபெற்ற நாடுகள் செருமன் எழுத்து முறைப்படி வந்தன அதனால் எகிப்து முதலில் வந்தது. போட்டி நடத்தும் நாடு (நகரம்) தெரிவுஆகத்து 26, 1966 ல் ரோமில் நடந்த 64வது நடத்த ஒலிம்பிக் ஆணையகத்தின் அமர்வில் முனிச் தேர்வு பெற்றது[2]
பதக்கப் பட்டியல்பங்கு கொண்ட நாடுகளில் 48 பதக்கம் பெற்றன. போட்டையை நடத்தும் நாடு மேற்கு செருமனி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia