காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் இராமேசுவரர், இலட்சுமீசுவரர் கோயில் (இராமேசம் - இலட்சுமீசம்) என்றழைக்கப் பெற்ற இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். இது, சர்வ தீர்த்தம் (குளத்தின்) தெங்கரையில் தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்தல வரலாறுஇராமர் வழிபட்டதாக சொல்லப்படுவது இராமேசம் கோயில் என்றும், இலட்சுமி வழிபட்டதாக சொல்லப்படுவது லட்சுமீசம் என்றும் வழங்குகிறது.[2] தல பதிகம்
அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் வேலூர் செல்லும் சாலையிலுள்ள சர்வதீர்த்தத்தின் (குளத்தின்) தென்கரையில் மல்லிகார்சூனர் கோயிலையடுத்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. மற்றும் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து, காஞ்சி கச்சபேசுவரர் கோயிலின் வழியாக காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் இந்த மண்டபத்தை அடையலாம்.[4] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia