காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில்
காஞ்சிபுரம் மாசாத்தன்தளீசுவரர் கோயில் (மாசாத்தன்தளி) என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுஇறைவன் திருமாலின் மோகினி வடிவில் மயங்கியபோது தோன்றிய சாத்தனார், காஞ்சியை அடைந்து சிவலிங்கப் பிரதிட்டை செய்து வழிபட்டார். அத்தலமே மாசாத்தான்தளி எனப்பட்டது.[2] அமைவிடம்தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) மேலாண்டை இராசவீதி எனப்படும் மேற்கு இராசவீதியில் வணிப வைசியர் தர்ம பரிபாலன சத்திரத்தையொட்டியுள்ள மண்டபத்தில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சி கச்சபேசுவரர் கோயில் வழியாக காஞ்சி சங்கர மடம் செல்லும் வழியில், இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[3] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia