காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில்
காஞ்சிபுரம் மார்க்கண்டேசுவரர் கோயில் (மார்க்கண்டேசம், (ஏகம்பம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இம்மூர்த்தியை மார்க்கண்டேயர் வழிபட்டதாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1] இறைவர், வழிபட்டோர்
தல வரலாறுமார்க்கண்டேய முனிவர் ஓர் காலத்தில் சலப்பிரளயம் (பெருவெள்ளம்) வந்தபோது அதில் நீந்திவந்து ஓர் புகலிடம் காணாது மனம் வருந்திப் பார்க்க காஞ்சியிலுள்ள வேதசுவரூபமாகிய மா விருடம் வளர்ந்து சலப்பிரளயத்தின் மேல் தோன்றியது அதுகண்டு அதனைப் பிடித்துக் கொண்டு காஞ்சியிலிருந்து ஆரம்பமாகிய யாவையும் ஆம்ர நாதரையும் (ஏகாம்பர நாதரை) கண்டு களித்துப்பின்னர் தமது பெயரால் பூசித்தனர்.[2] அமைவிடம்இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் அகத்தில் முதல் பிரகார வடக்கு பக்கத்தில் மத்தளமாதவேசத்திற்கு அருகில் இம்மூர்த்தி அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து வடக்கில் சிறிது தூரம் சென்றால் இக்கோயிலை (காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்) அடையலாம்.[3] இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia