சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962
சென்னை மாநிலத்தின் மூன்றாவது சட்டமன்றத் தேர்தல் 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காமராஜர் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார்[1]. தொகுதிகள்1962 இல் சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டில் மொத்தம் 206 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 167 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 38 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 37 தாழ்த்தப்பட்டவருக்கும் (SC) 1 பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கு முன் அமலில் இருந்த இரட்டை உறுப்பினர் முறை 1961 இல் கைவிடப்பட்டு அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே உறுப்பினர் என்ற முறை பின்பற்றப்பட்டது.[2] அரசியல் நிலவரம்1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜர், பெரியார் ஈ வே. ராமசாமியின் திராவிடர் கழகத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார். 1957 இல் முதல்வர் பதவியிலிருந்து விலகிய ராஜகோபாலாச்சாரி, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி சீர்திருத்தக் காங்கிரசு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (1959 இல் அதுவே சுதந்திராக் கட்சியாக மாறியது). 1957 இல் நடந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர்க் கட்சியாக மாறிய திராவிட முன்னேற்றக் கழகம் ஐந்தாண்டுகளில் மேலும் வளர்ச்சி பெற்றிருந்தது அதைவிட அக்கட்சிகுள் முன்னணி தலைவர்களான மு. கருணாநிதி, எம். ஜி. ஆர் அவர்கள் தன்னை திமுகவில் முன்னிருத்தி கொள்ள அவரது அரசியல் வளர்ச்சிக்கு போட்டியாக இருந்த நடிகர் சிவாஜி கணேசன், ஈ. வி. கே. சம்பத், கவிஞர் கண்ணதாசன் இடையே கடுமையான அதிகார போட்டியும் உட்கட்சிப் பூசலும் வளர்ந்திருந்தது. அதன் வெளிபாடாக மு. கருணாநிதி மற்றும் கண்ணதாசன் இடையே பெரும் மோதல்கள் ஏற்பட்டதலால் அவரது நண்பரும் பெரியாரின் அண்ணன் மகனும் திமுகவின் முன்னணி தலைவர்களிள் ஒருவரான ஈ. வெ. கி. சம்பத் திமுகவில் இருந்து வெளியேறி தமிழ் தேசியக் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார். அவருடன் கவிஞர் கண்ணதாசன், பழ. நெடுமாறன் மற்றும் அதற்கு முன்பு திமுகவிலிருந்து வெளியேறிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஃபார்வார்டு ப்ளாக், சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி, அம்பேத்கரின் குடியரசு கட்சி, பொதுவுடைமைக் கட்சி, பிரஜா சோசியலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன. பதினாறு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆனால் எதிர்க் கட்சியான திமுகவும் நல்ல வளர்ச்சி கண்டிருந்தது. இந்தத் தேர்தலில் அனைத்து எதிர்க் கட்சியினரையும் ஓரணியில் திரட்ட கா. ந. அண்ணாதுரை முயன்றார். ஆனால், இடதுசாரி கம்யூனிஸ்டுகளுக்கும் வலதுசாரி சுதந்திராக் கட்சியினருக்கும் இடையே இருந்த கொள்கை ஒவ்வாமை காரணமாக அவரது முயற்சி கைகூடவில்லை. இறுதியில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் திமுக விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் தொகுதி உடன்பாடு இருந்தது. எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையாலும் பெரியாரின் ஆதரவாலும் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது,[3][4][5][6] இத்தேர்தலில் திரைப்படத்துறையினரின் பங்கு பெரிதாக இருந்தது. எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) திமுக வின் சார்பாக பிரச்சாரம் செய்தார். நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் தேனி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சிவாஜி கணேசன் தமிழ் தேசியக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். காங்கிரசு “வாக்குரிமை” என்ற பிரச்சாரப் படத்தைத் தயாரித்து தமிழகமெங்கும் திரையிட்டது.[3][5] தேர்தல் முடிவுகள்பிப்ரவரி 21 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 71 சதவிகித வாக்குகள் பதிவாகின.[7]
ஆட்சி அமைப்பு![]() காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்று, காமராஜர் மூன்றாம் முறை முதல்வரானார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்கள் (3 மார்ச் 1962 - 2 அக்டோபர் 1963):[8][9][10]
மேலும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia