தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி 2021 செப்டம்பரில் இலங்கையில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடுகிறது.[1][2] ஒருநாள் போட்டித் தொடர் "2020–2023 ஐசிசி உலகக்கிண்ணத் துடுப்பாட்ட சூப்பர் லீக்" போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.[3][4]
இத்தொடர் தொடக்கத்தில் 2020 சூன் மாதத்தில் இடம்பெறுவதாக இருந்தது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகவும்,[5][6][7] 2020 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் காரணமாகவும்[8] பின்போடப்பட்டது.
இத்தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஆர். பிரேமதாசா அரங்கில் பாதுகாப்புக் கவசங்களுடன் நடைபெறும் என 2021 சூலை 30 இல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வாரியம் உறுதிப்படுத்தியது.[9][10] இலங்கை 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.[11][12][13] தென்னாப்பிரிக்கா மூன்று ஆட்ட ப20இ தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியீட்டியது.[14][15]
அணிகள்
ஒருநாள் தொடர்
1-வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 10, தென்னாப்பிரிக்கா 0.
2-வது ஒருநாள்
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இலங்கைஇன் வெற்றி இலக்கு 41 நிறைவுகளுக்கு 265 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
- ஜோர்ஜ் லிண்டே (தெஆ) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
- கேசவ் மகராச் முதல் தடவையாக ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிகாவுக்காக தலைவராக விளையாடினார்.[19]
- தப்ரைசு சம்சி ஒருநாள் போட்டிகளில் தனது முதலாவது ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[20]
- உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 0, தென்னாப்பிரிக்கா 10.
3-வது ஒருநாள்
|
எ
|
|
|
|
ஆஇன்ரிக் கிளாசன் 22 (30) மகீசு தீக்சன 4/37 (10 நிறைவுகள்)
|
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகீசு தீக்சன (இல) தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடி, முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றினார்.[21]
- உலகக்கிண்ண சூப்பர் லீக் புள்ளிகள்: இலங்கை 10, தென்னாப்பிரிக்கா 0.
ப20இ தொடர்
1-வது ப20இ
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகீசு தீக்சன (இல), கேசவ் மகராச் (தெஆ) தமது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினர்.
2-வது ப20இ
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரவீன் ஜயவிக்கிரம (இல) தனது முதலாவது ப20இ போட்டியில் விளையாடினார்.
3-வது ப20இ
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்