நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம்
நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையம் (Nungambakkam railway station, நிலையக் குறியீடு:NBK) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது. இது சென்னைக் கடற்கரை நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், சூளைமேடு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 11 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இரயில் நிலையத்தின் தென்பகுதியில், சென்னை இலயோலாக் கல்லூரி இருப்பதால், எப்போதும் பரபரப்பாகவே இந்த நிலையம் காணப்படுகிறது. வரலாறு1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நடைபெற்ற போது இந்த தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[1] பாதுகாப்பு சிக்கல்கள்சென்னை நகரத்தின் பரபரப்பான தொடருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இந்த நிலையத்தில் பாதுகாப்பு காரணிகள் ஏதேனும் இல்லை. இதில் முக்கியமாக சிசிடிவி கேமரா இல்லை. 24 சூன் 2016 ஆம் ஆண்டு 24 வயதான கணினி பொறியியலாளர் சுவாடி என்பவர் காலை 6 மணி அளவில் தொடருந்திற்காக காத்துக் கொண்டிருந்த வேளையில், இளவயது கொலையாளி ஒருவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையானது ஊடகத்தால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் விளைவாக பெருமளவில் மக்கள் கூடும் ஒரு தொடருந்து நிலையத்தில் கண்காணிப்புக் காமிராக்கள் அமைக்கப்படாதிருந்தது குறித்து குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகள் தமது கண்டன விமர்சனங்களை தெரிவித்தன.[2] சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia