பயனர் பேச்சு:Semmal50வாருங்கள்!வாருங்கள், Semmal50, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள். தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--நந்தகுமார் (பேச்சு) 18:35, 16 திசம்பர் 2013 (UTC) தலைப்புகளில் பட்டம்வணக்கம், நபர் ஒருவரைப் பற்றிய கட்டுரைகளின் தலைப்பில் முனைவர், பேராசிரியர், சர், டாக்டர் போன்ற அந்நபரின் பட்டங்கள் சேர்க்கப்படுவதில்லை. அவ்வழக்கம் தமிழ் மட்டுமல்ல, எந்த மொழி விக்கிப்பீடியாக்களிலும் இல்லை.--Kanags \உரையாடுக 04:46, 3 சனவரி 2014 (UTC) புதிய விக்கி படிவமைப்புதொகு என்னும் குறிப்புடன் வரும் பகுப்புப் பிரிப்பு இல்லாமல் செய்திகளைத் தெளிவாகப் பகுத்துக் காட்டும் இவரது முறைமை (அடிக்கோடு போட்டு வெளிப்படச் செய்யும் முறைமை)பிறராலும் பின்பற்றப்படவேண்டிய ஒன்று. இதனை விக்கி முறைமை இல்லை என ஒதுக்கினால் அது விக்கியின் வளர்ச்சியைப் பாதிக்கும். --Sengai Podhuvan (பேச்சு) 20:41, 10 சனவரி 2014 (UTC)
நைப்பால்நைப்பால் குறித்த கட்டுரையை ஆரம்பித்தமைக்குப் பாராட்டுகள். கட்டுரையில் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். அவற்றைக் கவனியுங்கள். அதற்கேற்ப இனிமேல் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 09:28, 27 சனவரி 2014 (UTC)
சில குறிப்புகள்வணக்கம் ஐயா, தங்களை நேரில் கண்டு அளவளாவியதில் மகிழ்ச்சி. நினைவுக்குறித்தாள் என்ற பக்கம் தங்களுடைய கட்டுரைகளை வடிவமைக்க உதவும். மேலும் வார்ப்புரு:தகவற்சட்டம் நபர், வார்ப்புரு:தகவல் சட்டம் எழுத்தாளர் ஆகிய பக்கங்களையும் காணுங்கள். இவற்றிலிருந்து எடுத்தாளப்படும் வார்ப்புருவானது நபர்கள் பற்றிய கட்டுரையில் மிக எளிமையாக அவர்களைப் பற்றிய தகவல்களைப் படிப்பவர்களுக்கு எளிதாக தர உதவும். வே. வசந்தி தேவி கட்டுரையில் தகவற்சட்டம் நபர் வார்ப்புருவை இணைத்துள்ளேன். அக்கட்டுரையில் தொகு பொத்தானைச் சொடுக்கி நான் செய்துள்ள மாற்றங்களைக் காணுங்கள். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:51, 3 பெப்ரவரி 2014 (UTC) வேண்டுகோள்தொகு என்னும் குறிப்புடன் வரும் பகுப்புப் பிரிப்பு இல்லாமல் தகவலைப் பகுத்துக் காட்ட அடிக்கோடு இடும் முறையை அருள்கூர்ந்து இனிமேல் கட்டுரைகளில் சேர்க்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். அது விக்கி நடைமுறையல்ல. விக்கித் தொழில்நுட்பத்துக்கும் மாறானது. இவ்வாறு எழுதப்படும் கட்டுரைகளுக்கு வார்ப்புரு:விக்கியாக்கம் இடப்படும்.--Kanags \உரையாடுக 11:25, 15 மார்ச் 2014 (UTC) தொடர் பங்களிப்புக்கு நன்றி வணக்கம், Semmal50! ![]() தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும். பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி. --✍mohamed ijazz © (பேச்சு) 14:10, 31 மார்ச் 2014 (UTC) வேண்டுகோள்...!ஐயா, வணக்கம்! தமிழ் விக்கியில் தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி! தனபால் (ஓவியர்) எனும் கட்டுரையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் கவனியுங்கள். அடுத்த கட்டுரையை இதேபோன்ற வடிவமைப்பில் எழுத முயற்சி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:34, 2 ஏப்ரல் 2014 (UTC) விக்கியிடை இணைப்புகள்நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு (இருப்பின்) மறக்காமல் விக்கியிடை இணைப்புகளை ஏற்படுத்திவிடுங்கள். பார்க்க: உதவி:விக்கியிடை இணைப்புகள் --AntonTalk 06:33, 8 ஏப்ரல் 2014 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், Semmal50! ![]() நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 2 மே 2014 (UTC) எந்த செம்மல்?நீங்கள் அறிவியல் தமிழ் மன்றத்தின் செம்மலா? [1] --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:55, 6 மே 2014 (UTC) இல்லை,ஐயா. நான் சென்னையில் வாழ்ந்து வருபவன்.வைப்பகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். தமிழ் மொழி,தமிழ் இன ஆர்வலன். ~~ உங்கள் கவனத்திற்குவணக்கம். விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் உருவாக்கி வருகிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுகள். உங்களது சில கட்டுரைகளில் ’விக்கியாக்கம்’ தொடுப்பிணைப்பி இணைக்கப்பட்டு பின்னர் அவை பிற பயனர்களால் விக்கி நடைக்கேற்றவாறு மாற்றம் செய்யப்படுகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்படும் மாற்றங்களைக் கவனித்து அதனை அடுத்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் பயன்படுத்தினால் கட்டுரைகள் மேலும் சிறப்பாக மேம்பாட்டுடன் அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:47, 22 மே 2014 (UTC) பதக்கம்
நன்றி.~~
பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.~~ தி. பொ. வேதாசலம் - தலைப்புதி. பொ. வேதாசலம் கட்டுரையை சரியான தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். தி.பொ. வேதாசலம் என்றிருப்பது தவறு, தி. பொ. வேதாசலம் என்றிருப்பதே சரியானது. மேலும் விபரங்களுக்கு விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பக்கத்தைப் பாருங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:45, 2 ஆகத்து 2014 (UTC) முதற்பக்க அறிமுகம் வேண்டல்வணக்கங்க. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/செம்மல் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:30, 9 ஆகத்து 2014 (UTC)
உதவி...எஸ். இராமநாதன் எனும் கட்டுரையின் வடிவமைப்பில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. உதவ வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:32, 29 ஆகத்து 2014 (UTC)
`` பொது வாழ்க்கை எனும் தலைப்பினை துணைத் தலைப்புகளாக பிரித்து, உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 29 ஆகத்து 2014 (UTC)
மிகவும் அருமையாக செய்தமைக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:15, 13 செப்டம்பர் 2014 (UTC) ஐயம்...வணக்கம்! இதழிகைப் பணி என்பது சரியா? விளக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:49, 25 திசம்பர் 2014 (UTC) வணக்கம்! பத்திரிக்கை என்பதற்குத் தமிழில் இதழிகை என்று அறிஞர்கள் பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்றோர் பயன்படுத்துவர். --பயனர்:செம்மல்50 விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு![]() வணக்கம் Semmal50! --User:aathavan jaffna 07:30, 30 திசம்பர் 2014 (UTC) ”விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு” பற்றிய திட்டம் குறித்து அறிந்து மகிழ்கிறேன். ஒரு பயனர் மட்டும் சனவரித் திங்களில் மட்டும் 100 தொகுப்புகள் எழுதவேண்டுமா? அவ்வாறாயின் ஒரு பயனர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 கட்டுரைகளை எழுதவேண்டும். நான் புரிந்துகொண்டது சரியா? தெரிவிக்கக் கோருகிறேன். ~~செம்மல்50
இந்தத் திட்டத்தில் கலந்து கொள்வேன்.~~செம்மல்50
நண்பர் இரவி அவர்களுக்கு நன்றி. தங்களின் ஊக்க உரைகள் எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ~~செம்மல்50 சிறப்புப் பதக்கம்
நன்றிகள் பல. ~~செம்மல்50
முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்வணக்கங்க. அடுத்த இரு வாரங்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 07:23, 29 சனவரி 2015 (UTC) இரவி அவர்களுக்கு நன்றி. ~~செம்மல்50
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. ~~செம்மல்50 சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சுவணக்கம் செம்மல் ஐயா! சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். நீங்கள் இக்கட்டுரையில் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் என்பவற்றைச் சரிபார்த்துத் திருத்தி உதவினால் பேருதவியாக அமையும். திருத்தும் போது ஆங்கிலக் கட்டுரையையும் கவனத்திற் கொள்ளுங்கள். கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கட்டுரையின் ஏதாவது ஒரு பகுதி நீங்கள் உரைதிருத்திச் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் சரிபார்க்கப்பட்டதாகக் கருதினால் இங்கு கையொப்பமிட்டு உதவுங்கள். இவ்வாறு செய்வது அனைத்து விக்கிப்பீடியர்களும் ஒன்றிணைந்து உரைதிருத்தத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:19, 10 பெப்ரவரி 2015 (UTC) உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க பிலிப்பீன்சு கட்டுரையைப் படித்துப் பார்த்து, பிழைகள் ஏதேனும் இருப்பின் திருத்த முயல்கிறேன். ~~செம்மல்50
பயனர் பெயரில் கட்டுரைகள்வணக்கம், பயனர் பெயர்களில் கட்டுரைகள் இருக்க முடியாது. சில புதிய பயனர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அறிந்தோ அறியாமலோ தமது பயனர் பக்கத்தில் அல்லாமல், தமது பெயர்களிலேயே கட்டுரைகளை உருவாக்கி விடுகிறார்கள். அக்கட்டுரைகளை இனம் காணும் போது அவற்றை அவர்களின் பயனர் பெயர்வெளிக்கு வழிமாற்ற வேண்டும். கட்டுரைத் தலைப்பில் நீக்கல் வார்ப்புருவை சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 20:36, 16 பெப்ரவரி 2015 (UTC) குறிப்பிடத்தக்க நூல்களா என்பதை கருத்தில் கொள்கவணக்கம் ஐயா, சமீபத்தில் நீங்கள் தொகுத்திருந்த சமற்கிருத ஆதிக்கம் (நூல்) கட்டுரையைக் கண்டேன். தமிழில் உள்ள அனைத்து நூல்களையும் கலைகளஞ்சியத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்று தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நூல் கட்டுரைகளை குறிப்பிடத்தக்கமையாக நிறுபனம் செய்யாமல் அவற்றை நீக்கம் செய்துள்ளார்கள். எனவே சமற்கிருத ஆதிக்கம் நூல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அந்நூல் குறித்து உரையாடிள்ள இரண்டிற்கும் மேற்பட்ட அச்சு ஊடகங்களை மேற்கோளாக தர வேண்டுகிறேன். இல்லையென்றால் குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு இக்கட்டுரையில் இடம்பெறும். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். அத்துடன் தற்போது நீங்கள் இடுகின்ற கையெழுத்தானது சரியான இணைப்புடன் இல்லை, எனவே --~~~~ என்ற குறியீட்டினை கையெழுத்தினை இட பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 00:56, 26 மார்ச் 2015 (UTC) நண்பர் ஜெகதீசுவரனுக்கு நன்றி. இந்நூலின் சிறப்புக் குறித்து தமிழ் விக்கிப்பீடியா அறிஞர்கள் முடிவு செய்யலாம். --Semmal50 (பேச்சு) 12:26, 26 மார்ச் 2015 (UTC) மா. நன்னன் கட்டுரையில் ஆதாரங்கள் இணைக்க வேண்டுதல்வணக்கம் ஐயா, மா. நன்னன் கட்டுரையில் இரு இடங்களில் ஆதாரங்களை இணைக்க கோரியிருக்கிறேன். அவற்றிக்கு தக்க ஆதாரங்கள் கிடைத்தால் இணைக்கவும். இதன் மூலம் அக்கட்டுரையின் தரம் மேலும் கூடும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:34, 29 மார்ச் 2015 (UTC) பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்
Translating the interface in your language, we need your helpHello Semmal50, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
![]() Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC) தானியங்கி வரவேற்புவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC) இட ஒதுக்கீடுவணக்கம்! இட ஒதுக்கீடு எனும் கட்டுரை முழுவதுமாக சொந்தக் கருத்துகளைக் கொண்டிருந்த காரணத்தினால், நீக்கிவிட்டேன் (கலைக்களஞ்சியக் கட்டுரையன்று என்பதாக). கடுமையான விருப்பு-வெறுப்புகளை இக்கட்டுரை கொண்டிருந்தது! இந்தக் கட்டுரையில் 10க்கும் மேற்பட்ட தொகுப்புகளை பிழை திருத்தும் கண்ணோட்டத்தில் தாங்கள் செய்திருந்தபடியால் இதனை தங்களுக்கு தெரிவிக்கின்றேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:19, 10 மே 2015 (UTC)
இந்தியாவில் இட ஒதுக்கீடு எனும் கலைக்களஞ்சியக் கட்டுரை ஏற்கனவே நமது தமிழ் விக்கியில் உள்ளது!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:46, 10 மே 2015 (UTC) செய்தி தெரிவித்தமைக்கு நன்றி,ஐயா.--Semmal50 (பேச்சு) 07:23, 10 மே 2015 (UTC) வலைபூக்களை நீக்கவும்வலைபூக்களை விக்கியில் கட்டுரைப் பக்கத்தில் போடக்கூடாது என விதியுள்ளது. அவை அனைவற்றையும் நீக்கிடவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:57, 19 மே 2015 (UTC) இணையத்தில் google நிறுவனம் இயக்கித்தரும் wordpress, blogspot, ஆகிய தளங்களில் wordpress தளத்தில் உள்ள செய்திகளுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. நறவங்கொடி இதனைப் பின்பற்றி blogspot தளத்திலுள்ள அரிய, சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள கட்டுரைகளுக்கும் வெளியிணைப்பு தருதல் முறையாகும். இந்த அடிப்படையில் என் பணி தொடர்கிறது. --Semmal50 (பேச்சு) 15:59, 5 அக்டோபர் 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! --Kanags \உரையாடுக 12:23, 8 சூலை 2015 (UTC) உளங்கனிந்த நன்றி!![]() வணக்கம்! விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி! - ஒருங்கிணைப்புக் குழு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:23, 25 சூலை 2015 (UTC) உதவிவணக்கம். எட்வர்டு செயித் கட்டுரையில் தகவற்பெட்டியை இணைத்திருக்கிறேன். அதில் ஆங்கிலத்திலுள்ள சில விவரங்களைத் தமிழாக்கம் செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:11, 2 ஆகத்து 2015 (UTC) மாரத்தான் தொகுப்புப் புள்ளிவிபரம்உங்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் பங்களித்த புள்ளிவிவரம் இங்கே உள்ளது --நீச்சல்காரன் (பேச்சு) 17:26, 9 ஆகத்து 2015 (UTC) செய்திக்கு நன்றி.--Semmal50 (பேச்சு) 14:00, 10 ஆகத்து 2015 (UTC) வாழ்த்துகள்மறக்கப்பட்ட கவிஞர் தமிழ்ஒளி பற்றிய தங்கள் கட்டுரையைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்.வாழ்த்துகள். தோழர், கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பெயரை அவைஞர் அவர்கள் பயன்படுத்தியது போலவே இணைத்தே எழுதிட அன்புடன் வேண்டுகிறேன். -Dr.Ezhilvendan (பேச்சு) 10:01, 29 ஆகத்து 2015 (UTC)
குறிப்பிடத்தக்கமை, நூல்கள்நூல்கள் பற்றிய கட்டுரைகள் இந்த வழிகாட்டலுடன் ஒத்துப் போகின்றதா என்பதைக் கவனியுங்கள். அல்லாவிடில் அவ்வாறான கட்டுரைகள் நீக்கப்படலாம். ஒரு நூலையோ அதற்கு ஆதாரமாகக் கொள்ள முடியாது. (புத்தகம் தன்னகத்தே அல்லாமல், சுயாதீனமான பிரசுரிக்கப்பட்டதும் சாதாரணமற்றதுமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களில் கூறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.) --AntanO 03:52, 1 நவம்பர் 2015 (UTC) தங்கள் அறிவுறுத்தலை மனத்தில் கொண்டேன். நூலைப் பற்றிய வேறு பிரசுரங்கள் அல்லது மேற்கோள்கள் இருந்தால் அவற்றைக் காட்டுவேன்.--Semmal50 (பேச்சு) 09:17, 1 நவம்பர் 2015 (UTC) உசாத்துணைகள்வணக்கம். கட்டுரைகளில் வெளி இணைப்புகள் பாவனை அக்கட்டுரைக்கு சான்றாக. உசாத்துணைகள் அல்லது மேற்கோள்கள் மூலமே அதனை உறுதிப்படுத்த வேண்டும். மேற்கோள் சுட்டுவதில் உதவி தேவையெனின் இதனைப் பாருங்கள். நன்றி. --AntanO 04:14, 9 நவம்பர் 2015 (UTC) வணக்கம். மேற்கோள் சுட்டுவதில் நான் பிழை செய்கிறேன் என உங்கள் இந்தக் குறிப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. எத்தகைய பிழை என்பதை எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிவித்தால் பயனடைவேன்.--Semmal50 (பேச்சு) 09:19, 9 நவம்பர் 2015 (UTC) விருது பெற்றோர் கட்டுரையாக்கம்ஐயா! பல அறிஞர்களின் கட்டுரைகளை உருவாக்கியுள்ளீர்கள். நன்றி. அந்த வழியில், வார்ப்புரு:பத்ம விபூசண் விருதுகள் என்ற வார்ப்புருவில், பல கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. சில கட்டுரைகளையாவது நீங்கள் உருவாக்க வேண்டும் எனக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 07:43, 22 நவம்பர் 2015 (UTC) வார்ப்புரு தோன்றி ஒரு நொடியில் மறைந்து விடுகிறது. எனவே பட்டியலைப் படிக்க முடியவில்லை. உதவ வேண்டுகிறேன்.--Semmal50 (பேச்சு) 12:21, 22 நவம்பர் 2015 (UTC)
ரகுநாத் மகபத்ர என்னும் கட்டுரையில் மூன்று முறை வார்ப்புரு இடப்பட்டுள்ளது. காண்க. திருத்துக.--Semmal50 (பேச்சு) 01:13, 1 திசம்பர் 2015 (UTC)
பத்மசிறீ RequestGreetings. Could you create in Tamil Wikipedia, the article en:Baku Zoo? Thank you. Menikure Talk 19:30, 9 December 2015 (UTC) மகிழ்ச்சி...![]() சனவரி 9 அன்று தங்களை சந்தித்ததில் மனம் மகிழ்ந்தேன்; உதவிக்கு தயங்காமல் அணுகவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:29, 9 சனவரி 2016 (UTC) நன்றி. மகிழ்ச்சி. உரையாடுவோம்.--Semmal50 (பேச்சு) 01:43, 10 சனவரி 2016 (UTC)
பி. எஸ். கைலாசம்வணக்கம்! பேச்சு:பி. எஸ். கைலாசம் எனும் பக்கத்தில் தங்களுக்கு செய்தியொன்று உள்ளது; பி. எஸ். கைலாசம் எனும் கட்டுரையை இன்னமும் விரிவுபடுத்திய பிறகு, பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்தினைத் தெரிவியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:19, 12 சனவரி 2016 (UTC) உரியன செய்யப்பட்டன; கட்டுரையையும், பேச்சுப் பக்கத்தையும் இப்போது பார்வையிடுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:28, 13 சனவரி 2016 (UTC) ஐயம்...நீதிபதி நாகப்பன் இப்பதவியில் 2016 அக்டோபர் மாதம் மூன்றாம் பக்கல் வரை இருப்பார் என எழுதியுள்ளீர்கள். பக்கல் என்பதன் பொருள் என்ன? அறிந்துகொள்ள ஆர்வம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:58, 8 பெப்ரவரி 2016 (UTC) தமிழ் விக்சனரியில் பொருள் வேறுபடுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:24, 8 பெப்ரவரி 2016 (UTC)
தேதி என்பதும் திகதி என்பதும் தமிழ்ச் சொற்கள் அல்ல. நாள் என்றும் பக்கல் என்றும் வழங்கலாம். பக்கல் என்பது மிகவும் சரியான சொல். இது தேவநேயப் பாவாணர் புழங்கவிட்ட சொல் ஆகும். புதிய சொற்கள் பயன்பாட்டுக்கு வருதல் நல்லதுதானே!--Semmal50 (பேச்சு) 08:23, 8 பெப்ரவரி 2016 (UTC)--Semmal50 (பேச்சு) 08:24, 8 பெப்ரவரி 2016 (UTC)
ஏற்கனவே இங்குக் கூறியவாறு நாள் என்பது இனிய எளிய தமிழ்ச் சொல். திகதி, தேதி ஆகிய இரண்டும் சமசுக்கிருதச் சொல்.' டே' என்னும் ஆங்கிலச் சொல் தருகிற பொருள் கொண்டது நாள். பகலும் இரவும் கொண்டது ஒரு நாள். 'இன்றிலிருந்து எட்டாம் நாள்' எனச் சொல்லும்போது தெரிவிக்கப்படுகிற கருத்து வேறு. 'செப்டம்பர் எட்டாம் நாள்' எனச் சொல்லும்போது தெரிவிக்கப் படுகிற கருத்து வேறு. இதைக் கருத்தில் கொண்டு DATE என்னும் சொல்லுக்குப் பக்கல் என பாவாணர் உருவாக்கினார். 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' எனவே புதிய சொல் பழகப் பழக எளியதாகிவிடும். நமஸ்காரம், அக்ராசனர், விவாக சுப முகூர்த்தம், மகாமகோபாத்யாய, சர்வகலாசாலை போன்ற சமசுக்கிருத சொற்கள் வழக்கிழந்து போய் அவற்றிற்கான தமிழ்ச் சொற்கள் புழக்கத்திற்கு வந்து விட்டன. எனவே விளங்காத சொற்கள் புரியாத சொற்கள் என நினைக்க வேண்டாவெனக் கோருகிறேன். திகதி தேதி ஆகிய சொற்களைத் தவிர்க்கலாம். நாள் என்பதைப் பயன்படுத்தலாம். பக்கல் என்பதையும் அறிமுகப்படுத்தி எழுதிப் பரப்பலாம். --Semmal50 (பேச்சு) 16:15, 8 பெப்ரவரி 2016 (UTC)
தவறு இல்லை.--Semmal50 (பேச்சு) 17:09, 8 பெப்ரவரி 2016 (UTC)
கடந்த 40 ஆண்டுகளாக இந்த பக்கல் என்னும் சொல் தேதி அல்லது திகதி என்னும் நேரடியான பொருளில் தூய தமிழ் விரும்பிகளால் பயன்பாட்டில் உள்ளது. எனவே உங்கள் திட்டப்படி செயல்படுத்தலாம் என்பதே என் கருத்து கருத்து ஆகும். -- கடந்த 40 ஆண்டுகளாக இந்த பக்கல் என்னும் சொல் தேதி அல்லது திகதி என்னும் நேரடியான பொருளில் தூய தமிழ் விரும்பிகளால் பயன்பாட்டில் உள்ளது. எனவே உங்கள் திட்டப்படி செயல்படுத்தலாம் என்பதே என் கருத்து கருத்து ஆகும்.--Semmal50 (பேச்சு) 00:01, 9 பெப்ரவரி 2016 (UTC) தற்காவல்![]() வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும்.--நந்தகுமார் (பேச்சு) 09:49, 5 சூன் 2016 (UTC) விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு![]() வணக்கம்! சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :) தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:46, 26 சூலை 2016 (UTC) உளங்கனிந்த நன்றி!![]() வணக்கம்! விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி! - ஒருங்கிணைப்புக் குழு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:34, 22 ஆகத்து 2016 (UTC) @Semmal50: ஆர் தி ரணா கட்டுரையில் தங்களது பங்களிப்பு சாதகமாக இருந்தது அவதானித்தபோது . அப்படி இருந்த போதும் அக்கட்டுரை ஏன் கருத்து ஓற்றுமை பெறப்படாமல் நீக்கபட்டது தயவுசெய்து அருள்கூா்ந்து பதில் வழங்கவும் Uthayai (பேச்சு) 15:03, 23 செப்டம்பர் 2016 (UTC) விக்கிக்கோப்பை![]() வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள். போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!.. .
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:50, 8 திசம்பர் 2016 (UTC) விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1![]()
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
.
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:13, 10 திசம்பர் 2016 (UTC) விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்![]()
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள். அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
.
--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:43, 11 திசம்பர் 2016 (UTC) விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி
விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:45, 31 திசம்பர் 2016 (UTC) விக்கித்தரவில் இணைப்புநீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. இல்லாவிடில் வேறு ஒரு பயனர் ஒரே கட்டுரையை வேறொரு தலைப்பில் எழுதும் சாத்தியங்கள் உள்ளன.--Kanags \உரையாடுக 05:58, 12 சனவரி 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:47, 6 மார்ச் 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி.. போட்டி: போட்டிக்காலம் போட்டிக்காக
நீங்கள் இங்கு --ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC) தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவுஉங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1
•
போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:57, 12 மார்ச் 2017 (UTC) விக்கிமீடியா வியூகம் 2017தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:35, 10 ஏப்ரல் 2017 (UTC) விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:06, 30 ஏப்ரல் 2017 (UTC)
தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:03, 21 மே 2017 (UTC) தகவல்...வணக்கம்! இந்த வகைப்பிரித்தல் தங்களுக்கு உதவக்கூடும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:34, 29 மே 2017 (UTC) தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புபோட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:37, 31 மே 2017 (UTC) துப்புரவுப் பணியில் உதவி தேவைவணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும். சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC) ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவைஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:36, 20 சூன் 2017 (UTC)
கவனிக்கஆலிவர் பர்க்மன் கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தங்களைக் கவனியுங்கள். ஆங்கில விக்கியில் இருந்து கட்டுரையை மொழிபெயர்க்கும் போது மேற்கோள்களை முழுமையாகப் படி எடுங்கள். url மட்டும் போதாது. ஆசிரியப் பயிற்சியாளர்களின் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைக் கவனிக்க வேண்டி உள்ளது. அவற்றுடன் உங்கள் கட்டுரைகளிலும் இவ்வாறான சிறிய திருத்தங்களை செய்ய வேண்டி உள்ளதால் பெரும் பளு எம்மீது சுமத்தப்படுகிறது. இதனை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் "தானியக்க சுற்றுக்காவலர்" அனுமதி பெற்றுள்ளீர்கள். அவ்வாறிருக்க இவ்வாறான தவறுகளை நீங்களே கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:24, 3 சூலை 2017 (UTC) பகுப்புகளுக்குப் பெயர் மாற்றம்கட்டுரைகளை புதிய தலைப்புக்கு நகர்த்துவது போன்று பகுப்புகளை புதிய தலைப்புக்கு நகர்த்த முடியாது. பகுப்புகளை நகர்த்துவதற்கு தானியங்கி அணுக்கம் உள்ள ஒருவரை நாடுங்கள்.--Kanags \உரையாடுக 09:38, 5 சூலை 2017 (UTC) கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புஅன்புள்ள செம்மல், உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல். 2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன். இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்: தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன். நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது. 2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது. அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று. ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும். இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும். வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:37, 10 மார்ச் 2018 (UTC)
வேங்கைத் திட்டம்நண்பருக்கு வணக்கம். தங்களைப் போன்ற விக்கியின் வழமைகள் தெரிந்த நபர்கள் வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதினால் நலமாக இருக்கும். இந்த வெற்றியின் மூலம் உங்களைப் போன்றவர்களின் ஆலோசனைகள் என் போன்றவர்களுக்குக் பயிற்சி வகுப்பின் மூலம் கிடைக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். வாழ்க வளமுடன். நன்றி.Dsesringp (பேச்சு) 07:40, 8 மே 2018 (UTC) உங்களுக்குத் தெரியுமா? திட்டம் உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. |
Portal di Ensiklopedia Dunia