பாசுபரசு பெண்டாபுரோமைடு (Phosphorus pentabromide) என்பது PBr5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் அதிக வினைத்திறம் கொண்டதாக உள்ளது. திண்மநிலையில் டெட்ராபுரோமோபாசுப்போனியம் புரோமைடு ([PBr4]+[[Bromide|Br−]) கட்டமைப்பில் காணப்படுகிறது. ஆனால் நீராவி நிலையில் PBr3 மற்றும் Br2 ஆக் முற்றிலும் பிரிக்கப்படுகிறது. இந்நீராவி நிலை விரைவாக 15 கெல்வின் வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்டால் பாசுபரசு எழுபுரோமைடு (டெட்ராபுரோமோபாசுப்போனியம் முப்புரோமைடு) அயனி இனங்கள் உருவாகின்றன.[2]
கரிம வேதியியலில் கார்பாக்சிலிக் அமிலங்களை அசைல் புரோமைடுகளாக மாற்ற பாசுபரசு பெண்டாபுரோமைடைப் பயன்படுத்தலாம். இது மிகவும் அரிக்கும் தன்மை கொண்டது. தோல் மற்றும் கண்களை கடுமையாக எரிச்சலூட்டுகிறது. பாசுபரசு முப்புரோமைடு மற்றும் புரோமினைக் கொடுக்க இது 100 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடுபடுத்தப்பட்டு சிதைக்கப்படுகிறது:[3]
PBr5 → PBr3 + Br2
Br2 வாயுவுடன் PBr3 சேர்மத்தைச் சேர்ப்பதன் மூலம் PBr5 சேர்மத்தை உருவாக்க இந்த சமநிலையை மாற்றியமைப்பது நடைமுறையில் கடினமாக உள்ளது. ஏனெனில் இந்த தயாரிப்பு பாசுபரசு எழுபுரோமைடு [PBr4]+[Br3]− விளைச்சலுக்கு மேலும் கூடுதலுக்கு ஆளாகிறது.[4]
↑Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN0080379419.
↑Popov, A. I.; Skelly, N. E. (1954). "Spectrophotometric Study of Phosphorus Pentabromide in Various Solvents". J. Am. Chem. Soc.76 (15): 3916–3919. doi:10.1021/ja01644a014.