மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)
மனதில் உறுதி வேண்டும் (Manathil Urudhi Vendum) 1987-இல் கே. பாலசந்தரின் எழுத்து, இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் நூறு நாட்கள் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாகும். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்திக்கும் ஒரு செவிலியரின் கதை. குடும்பத்தில் ஓடிப்போகும் சகோதரி, சகோதரன் மரணம், கணவனின் விவாகரத்து என பல போராட்டங்களை ஒரு சேர சந்திக்கும் பெண்ணின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது இப்படத்தின் கதை.[1] இத்திரைப்படத்தில் சுஹாசினி, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீதர், விவேக், லலிதா குமாரி, சித்திரா, சந்திரகாந்த், யமுனா ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோர் விருந்தினர்களாக ஒரு பாடல் காட்சியில் நடித்தனர். இத்திரைப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியிடப்பட்டது. கதைநந்தினி என்ற கதாபாத்திரத்தில் சுஹாசினி நடித்த ஒரு செவிலியரின் கதையாகும். ஏழு உடன்பிறப்புகள், வேலையில்லாத பெற்றோர்கள் என அவரது மிகப்பெரிய குடும்பத்தில் ஒரே ஒரு வருமானம் ஈட்டுபவராக உள்ளார். விவாகரத்து, ஒரு சகோதரனை இழத்தல், ஓர் ஓடிப்போன சகோதரி, தோல்வியுற்ற இரண்டாவது காதல், உறுப்பு தானம் உள்ளிட்ட பல தடைகளை அவர் எதிர்கொள்கிறார். இவர் அவர்களைக் கண்ணியத்துடன் கையாளுகிறார். நடிகர்கள்
இரசினிகாந்து, விசயகாந்து, சத்யராஜ் ஆகியோர் "வங்காளக் கடலே" என்ற பாடல் காட்சியில் நடித்திருந்தனர் .[3] பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia