வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி

வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி
தலைவர்பொள்ளாச்சி தங்கராசு
தலைமையகம்வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி,
127/47, கணேஸ் விலாஸ்,
சத்தியமுர்த்தி நகர்,
திருச்சி 8
இந்தியா அரசியல்

வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி குறவன், மலைக்குறவன் சமுதாயத்திற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காவும் பாடுபட ஆரம்பிக்கப்பட்டது. இந்தக்கட்சி தமிழ்நாடு மலைக்குறவன் மகாஜன சங்கத்தின் அமைப்பை கலைத்து விட்டு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டது.[சான்று தேவை]

இந்தக்கட்சியின் தலைவராக பொள்ளாச்சி தங்கராசுவும், பொதுச் செயலாளராக திருச்சி வெங்கடேஸ்வரனும் செயல்படுகிறார்கள். இந்தக்கட்சியின் தலைமை அலுவலகம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. இந்தக்கட்சியின் கொடி பச்சை வண்ணத்தில் வில் அம்பு பொறிக்கப்பட்ட வடிவத்தில் உள்ளது.

வரலாறு

வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி என்கிற இந்த கட்சி உருவாகுவதற்கு முன் 1975ஆம் ஆண்டு தமிழ்நாடு மலைக்குறவன் மகாஜன சங்கம் என பெயரிடப்பட்டு திருச்சியை தலைமை இடமாக வைத்து செயல்பட்டு வந்தது. அப்பொழுது மாநிலத் தலைவராக திருச்சி என். சங்கிலியப்பன், மாநில பொது செயலாளராக மதுரை சி. சின்னசாமி, நிர்வாகத் தலைவராக திருச்சி எம்.செல்லையா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டார்கள்.

சமுதாய அமைப்பாகச் செயல்பட்டுப் போராடுவதால் கோரிக்கைகளை அரசுக்கு சரியான முறையில் எடுத்துச் செல்லப்பட முடியவில்லை. இதனால் இந்த மக்களுக்குச் சலுகைகளைப் பெற்றுத் தர முடியவில்லை எனவும் அரசியல் அமைப்பாக மாறி விட்டால் தங்களுக்கு சலுகைகளை பெற்று விடலாம் எனவும் முடிவு எடுத்து இந்த சங்கத்தைக் கலைத்து விட்டு வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி என்ற கட்சியினைத் தொடங்கினர்.

கோரிக்கை

இந்திய அரசாங்கம் சாதி பிரிவின் அடிப்படையில் இந்த இனத்தின் மலைக்குறவன், மலைவேடன் போன்ற ஒரு சில பிரிவுகளை பழங்குடியினர் பட்டியலிலும் மற்ற பிரிவினரான குறவன், உப்புக்குறவன், தப்பக்குறவன், இஞ்சிக்குறவன், குறசெட்டி என 27 பிரிவுகளில் உள்ளோரை சீர்மரபினர் பட்டியலிலும் பிரித்துள்ளது.[1]. இந்த மக்கள் ஒரே சாதியின் பெயர்களில் வசித்து வந்தாலும் பல பிரிவுகளில் பிரிக்கப்பட்டதால் அரசாங்க சலுகைகளை இவர்களால் பெற முடியவில்லை. சலுகைகளை பெறுவதற்கு இவர்கள் அனைவருக்கும் மலைக்குறவன் என்ற சாதி சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் நீண்ட கால கோரிக்கை. குறவன் சமுதாயத்தைப் பழங்குடிப் பட்டியலில் சேர்க்க இந்தக்கட்சி பாடுபடும் எனத் தெரிவித்தது.

மேற்கோள்கள்

  1. "தமிழக அரசு வெளியிட்ட பழங்குடியினர் சீர்மரபினர் பட்டியல்". Archived from the original on 2015-12-06. Retrieved 2015-10-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya