மௌரியப் பேரரசு என்பது மகதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் விரிவடைந்திருந்த ஒரு வரலாற்றுச் சக்தியாகும். இது பொ.ஊ.மு. 322-இல் சந்திரகுப்த மௌரியரால் நிறுவப்பட்டு, பொ.ஊ.மு. 185 வரை நீடித்திருந்தது. சிந்து-கங்கைச் சமவெளியை வென்றதன் மூலம் மௌரியப் பேரரசானது மையப்படுத்தப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரத்தில் அமைந்திருந்தது. அசோகரின் ஆட்சியின் போது பேரரசானது குறுகிய காலத்திற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் முக்கிய நகர மையங்களையும் நெடுஞ்சாலைக் குடியிருப்புகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொலைதூரத் தென்னிந்தியாவில் இருந்த பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. அசோகரின் ஆட்சிக் காலம் முடிந்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்து இது வீழ்ச்சியடையத் தொடங்கியது. பிரகத்ரதரைப் புஷ்யமித்திர சுங்கன் அரசியல் கொலை செய்து மகதத்தில் சுங்கப் பேரரசை நிறுவியதற்குப் பிறகு பொ.ஊ.மு. 185இல் இப்பேரரசு கலைக்கப்பட்டது. மேலும்...
கையசு சூலியசு சீசர் (100 பொ.ஊ.மு.–44 பொ.ஊ.மு.) என்பவர் ஓர் உரோமானியத் தளபதியும் அரசியல் மேதையும் ஆவார். இவர் கௌல் போர்களில் உரோமானிய இராணுவத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு தன் அரசியல் எதிரி பாம்பேயை ஓர் உள்நாட்டுப் போரில் தோற்கடித்தார். இறுதியாக பொ.ஊ.மு. 49-இல் சர்வாதிகாரியானார். பொ. ஊ. மு. 44-இல் அரசியல் கொலை செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்ந்தார். உரோமைக் குடியரசின் வீழ்ச்சியிலும் உரோமைப் பேரரசின் வளர்ச்சிக்கும் வழி வகுத்த நிகழ்வுகளில் முக்கிய பங்கை ஆற்றினார். தொடர்ச்சியான இராணுவ வெற்றிகளை கௌல் போர்களில் பெற்றதன் வழியாக உரோமைக் குடியரசில் மிகுந்த சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராக சீசர் வளர்ந்தார். மேலும்...
துட்டு என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும். இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக் குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.