வெர்னர் ஐசன்பர்க்வேர்னர் கார்ல் ஐசன்பேர்க் என்னும் முழுப்பெயர் கொண்ட வேர்னர் ஐசன்பேர்க் (வெர்னர் ஹைசன்பர்க், Werner Heisenberg, டிசம்பர் 5, 1901 - பெப்ரவரி 1, 1976) ஒரு புகழ் பெற்ற ஜெர்மானிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். குவாண்டம் பொறிமுறையைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான இவர் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயற்பியலாளர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். ஐசன்பர்க், நாஸி ஆட்சியின் கீழ் ஜெர்மன் அணு ஆற்றல் திட்டத்தின் தலைவராக இருந்தார். இத் திட்டத்தின் இயல்பும், இதில் ஐசன்பேர்க்கின் பங்களிப்பும் பெருமளவு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இவர், நவீன இயற்பியலின் மையக் கொள்கைகளுள் ஒன்றான ஐசன்பர்க் அறுதியின்மைக் கொள்கையை கண்டுபிடித்ததன் மூலமும், குவாண்டம் இயந்திரவியலின் வளர்ச்சியில் இவருடைய பங்களிப்புக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 'குவாண்டம் இயந்திரவியலைத் தோற்றுவித்தமைக்காக' 1932 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆய்வுப்பணி1924-25 ஆண்டுகளில் கோபனாவன் பல்கலைக்கழகத்தில் உள்ள கருத்தியற்பியல் நிலையத்தில் நீல்சு போரின் வழிகாட்டுதலில் ஆய்வுகளைச் செய்தார்; பின்னர் கோட்டிங்கெனில் மாக்ஸ் போர்ன், பாசுகுவல் சோர்டான் ஆகியோருடன் இணைந்து அணி இயந்திரவியலை உருவாக்கினார். 1927ஆம் ஆண்டில் குவாண்டம் இயந்திரவியலின் கணிதவியல் அடிப்படைகளை உருவாக்கும்போது அறுதியின்மைக் கொள்கையை உருவாக்கினார். இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia