இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகம்
இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகம் (Army Training Command) (சுருக்கமாக: ARTRAC), இந்தியத் தரைப்படையின் 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் சிம்லா உள்ளது.[1]இந்த இராணுவப் பயிற்சி கட்டளையகம் 1991ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. லெப். ஜெனரல் தரத்திலான உயர் இராணுவ அதிகாரி இக்கட்டளையகத்தின் கட்டளை தளபதியாக செயல்படுவார். வரலாறுஇந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகம் 1 அக்டோபர் 1991 அன்று மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரத்தில் தொடங்கப்பட்டது. பின் 31 மார்ச் 1993 அன்று இதனை சிம்லா நகரத்திற்கு மாற்றப்பட்டது.[2]இந்தியாத் தரைப்படையினருக்கு செயல்திறன் மிக்க பயிற்சியை வழங்குவதே இக்கட்டளையகத்தின் முக்கிய நோக்கமாகும்.[3] 2020ஆம் ஆண்டில் இந்தியத் தரைப்படையின் பயிற்சிகான தலைமை இயக்குநரகத்தை (Directorate General of Military Training (DGMT) இந்தியத் தரைப்படையின் பயிற்சி கட்டளையகத்துடன் இணைக்கப்பட்டது.[4] இந்தியத் தரைப்படையின் பயிற்சிகான தலைமை இயக்குநரகத்தின் கீழ் சைல் இராணுவப் பள்ளி, பெங்களூரு இராணுவப் பள்ளி, அஜ்மீர் இராணுவப் பள்ளி, பெல்காம் இராணுவப் பள்ளி, தோல்பூர் இராணுவப் பள்ளி மற்றும் சைனிக் பள்ளிகள் இயங்கி வந்தது[5] நோக்கங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia