அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்
115இலிருந்து 135 மீட்டர் வரை மதிப்பிடப்படும் இதன் உயரம் அந்நாளைய உலகின் மூன்றாம் (பிரமிட்கள் குஃபு மற்றும் காஃபரா அடுத்து) உயரமான கட்டிடமாகக் கருதப்படுகிறது.பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கலங்கரை விளக்கம் கி.பி. 956,1303 மற்றும் 1323 ஆண்டுகளின் நிலநடுக்கங்களின் போது அழிபட்டது. 1480ஆம் ஆண்டு அழிபட்ட கட்டிடத்தின் கற்களைக் கொண்டு அங்கு ஓர் கோட்டை எழுப்பப்பட்டு முழுமையாக பழமையான கட்டிடத்தின் இடிபாடுகள் அழிந்தன. 1994 இல் பிரான்சு தொல்பொருள் ஆய்வாளர்கள் அலெக்சாந்திரியாவின் கிழக்குத துறைமுக நிலத்தில் சில எச்சங்களைக் கண்டுபிடித்தனர்.[1] உசாத்துணை
வெளியிணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia