மன்னர்களின் சமவெளி![]() ![]() மன்னர்களின் சமவெளி (Valley of the Kings) எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்கே, திபான் மலை அடிவாரத்தில் உள்ளது. மன்னர்களின் சமவெளிப் பகுதியில் கி மு 16 முதல் 11 –ஆம் நூற்றாண்டு முடிய, இறந்து போன பார்வோன் எனப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் உயர்குடி பிரபுக்களின் சடலங்களை மம்மி முறையில் பதப்படுத்தி கல்லறைக் கட்டிடங்களில் அடக்கம் செய்யப்பட்டது.[1][2][3] மன்னர்களின் சமவெளில் 63 கல்லறைகள் உள்ளது.[4] எகிப்து நாட்டின் தெற்கில் பாயும் நைல் ஆற்றின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளியும், கிழக்கு கரையில் அல்-உக்சுர் நகரம் மற்றும் அல்-உக்சுர் கோயில் அமைந்துள்ளது.[5] மன்னர்களின் பள்ளத்தாக்கின் 63 கல்லறைகளில் இரண்டாம் ராமேசஸ், முதலாம் தூத்மோஸ் மற்றும் துட்டன்காமன் போன்ற மன்னர்களின் கல்லறைகள் புகழ் பெற்றதாகும். உலகின் பெரும் புகழ் வாய்ந்த தொல்லியல் களங்களில் மன்னர்களின் சமவெளியும் ஒன்றாகும். 1979-இல் மன்னர்களின் சமவெளியை உலகப் பராம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.[6] புதிய மம்மிகள் கண்டுபிடிப்பு
![]() இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia