கெர்செக் பண்பாடு அல்லது இரண்டாம் நக்காடா காலம் (Gerzeh culture or Naqada II), வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில்கிமு 3500 முதல் கிமு 3200 முடிய விளங்கிய புதிய கற்காலத்தியப் பண்பாடு ஆகும்.[2] இதனை இரண்டாம் நக்காடா காலம் என்றும் அழைப்பர். பண்டைய எகிப்தின்நைல் நதியின் கரையில் உள்ள பையூம் அருகில் உள்ள கெர்செக் தொல்லியல் களத்தில் இப்பண்பாட்டுக்குரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதால், இப்பண்பாட்டிற்கு கெர்செக் பண்பாடு எனப்பெயராயிற்று.[3][4]
கெர்செக் பண்பாட்டுக் காலத்தில், கெபல் எல்-அராக் கத்தி போன்ற வெளிநாட்டு கலைப்பொருட்களுடன், அதிக அளவில் திராட்சை (ஒயின்) மது பானம் கொண்ட ஜாடிகளும், வெள்ளி நகைகளும், நவரத்தின மணிகளும், பண்டைய அண்மை கிழக்கிலிருந்து எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டது. [8][9] and the silver which appears in this period can only have been obtained from Asia Minor.[10]நவரத்தின மணிகள் நடு ஆசியாவின்படாக்சானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. [11]
கிமு 3200 ஆண்டுகளுக்கு முந்தைய இப்பண்பாட்டுக் காலத்திய அழகிய தட்டுக்கள், எலும்பினால் செய்யப்பட்டஎறியுளிகள், [[தந்தம்|தந்தத்தில்] செய்யப்பட்ட பானைகள், கல் பானைகள் மற்றும் பல விண் கற்களால் செய்யப்பட்ட அறுப்பதற்கான அரிவாள்கள் மற்றும் மணிகள் எகிப்தின் கல்லறைகளில் 1911-ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டது. [18][19][20][21]இக்காலத்திய ஒரு தலையில்லாத முண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. [22]
ஓவியம் தீட்டப்பட்ட கல்லறைகள்
கெர்செக் பண்பாட்டுக் கால்த்திய பண்டைய எகிப்தின் நெக்கென் நகரத்திம் கல்லறைச் சுவர்களில் பணியாளர்கள், தேவதைகள் மற்றும் விலங்குகளின் ஓவியம், காலம் கிமு 3500-3200
இக்காலத்திய கல்லறைகளில் சமயச் சடங்குகள் தொடர்பான பிண ஊர்வலம், படகுகள், விலங்குகள், கால்நடைகள், பணியாளர்கள், தேவதைகளின் ஓவியங்களின் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.[23][24][25][26]
↑"The seal impressions, from various tombs, date even further back, to 3400 B.C. These dates challenge the commonly held belief that early logographs, pictographic symbols representing a specific place, object, or quantity, first evolved into more complex phonetic symbols in Mesopotamia." Mitchell, Larkin. "Earliest Egyptian Glyphs". Archaeology. Archaeological Institute of America. Retrieved 29 February 2012.
உசாத்துணை
Petrie/Wainwright/Mackay: The Labyrinth, Gerzeh and Mazghuneh, British School of Archaeology in Egypt XXI. London 1912