காப்ராவின் பிரமிடு
![]() ![]() காப்ராவின் பிரமிடு (Pyramid of Khafre)[2] (அரபி: هرم خفرع, romanized: haram ḵafraʿ, IPA: [haram xafraʕ]) பண்டைய எகிப்தின் கிசா பிரமிடுத் தொகுதிகளில் இரண்டாவது உயரமான பிரமிடு ஆகும். பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 2558 முதல் கிமு 2532 முடிய 26 ஆண்டுகள் ஆண்ட எகிப்தின் நான்காம வம்ச மன்னர் காப்ரா இப்பிரமிடை நிறுவினார்.[5] இந்த பிரமிடு கீசா நகரத்தில் உள்ளது. இப்பிரமிடிவின் அடிப்பாகம் 215.5 மீட்டர் நீளமும் (706 ft) மற்றும் 136.4 மீட்டர்கள் (448 அடி) உயரமும் கொண்டது.[2]. இப்பிரமிடின் ஒவ்வொரு கல்லும் 2 டன் கொண்ட சுண்ணக்கல்லில் கட்டப்பட்டது. இதனருகில் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் மற்றும் மன்னர் கூபுவின் பிரமிடும் உள்ளது. எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது, மன்னர் காப்ராவின் பிரமிடு திறக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டது. 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279 - கிமு 1213) கட்டளையின் படி, காப்ராவின் பிரமிடின் பெருங்கற்களைக் கொண்டு ஹெலியோபோலிஸ் நகரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். ![]() ![]() இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia