மெனப்தா கல்வெட்டு
மெனப்தா கல்வெட்டு (Merneptah Stele), இசுரயேல் கல்வெட்டு அல்லது மெனப்தா வெற்றிச் சின்னம் என்பது பண்டய எகிப்திய அரசனான மெர்நெப்தாவினால் உருவாக்கப்பட்ட வெற்றிச் சின்னமாகும். மெனப்தா அரசனின் கல்வெட்டு 1896 இல் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது எகிப்தின் தீபையில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது கெய்ரோவிலுள்ள எகிப்து நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.[1][2] இது வரலாற்று முக்கியத்துவம் பெறுவதற்கு இதில் காணப்படுகின்ற இசுரவேல் பற்றிய சிறு குறிப்பே காரணமாகும்.[2] இதுவே இசுரவேல் எனும் மக்கள் கானானில் வாழ்ந்ததை உறுதிப்படுத்தும் மிக முந்தய ஆதாரமாக விளங்குகின்றது. வேதாகமத்தின் கால எல்லையை வரையறுப்பதற்கும் இது முக்கியமாகின்றது. மெனப்தா கல்வெட்டின் உள்ளடக்கம்இக்கல்வெட்டானது கி.மு 1206-1203 இல் மெர்நெப்தா எனகிற எகிப்திய பார்வோன் மன்னனின் பிலிஸ்தியர்கள் மற்றும் கானான் தேசத்திற்கு எதிராக பெற்ற வெற்றிகளை வரிசைப்படுத்துகின்றது, இவற்றுள் இஸ்ரயேல் எனும் நாடும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மேசேயால் எகிப்திலிருந்து கூட்டி வரப்பட்ட மக்கள் கானான் தேசத்தில் கிமு 1200 ஆண்டளவில் படை பலமுள்ள அரசாக காணப்பட்டிருக்கின்றது என்பதற்கு இது சான்றாக விளங்குகின்றது. வரி 27இசுரேல் என்பதைக் குறிக்கும் வரி:
படக்காட்சிகள்
இவற்றையும் பார்க்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia