துட்டன்காமன் முகமூடி
துட்டன்காமன் முகமூடி (mask of Tutankhamun) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் இறந்த 13-வது பார்வோன் துட்டன்காமன் (ஆட்சிக் காலம்: கிமு 1334 - 1325) மம்மியின் முகத்திற்கு மேல் அணிவிக்கப்பட்ட மரண முகமூடியாகும். பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகளின் போது துட்டன்காமன் மம்மிக்கு அணிவித்த மரண முகமூடியானது தங்கம் மற்றும் பல வண்ண நிற நவரத்தினக் கற்கள் வேலைப்பாடுகளுடன் கூடியது. [4][5] துட்டன்காமன் முகமூடி 54 cm (21 அங்) உயரத்துடன், 39.3 cm (15.5 அங்) அகலத்துடன் மற்றும் 49 cm (19 அங்) ஆழத்துடன்,10.23 kg (22.6 lb) எடையுடன் கூடியது. [6]துட்டன்காமன் மரண முகமூடியின் பின்புறத்திலும் மற்றும் தோள் பகுதியிலும் பத்து செங்குத்து மற்றும் இரண்டு கிடைமட்ட கோடுகளில் எகிப்திய மொழியில் பட எழுத்துக்களில் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ஓவர்டு கார்ட்டர், தீபை நகரத்தின் மன்னர்களின் சமவெளியில் கல்லறை எண் 62ஐ 1923-இல் அகழாய்வு செய்த போது துட்டன்காமனின் பிணமனைக் கோயில் கண்டிபிடித்தார். 1925-இல் துட்டன்காமனின் சவப்பெட்டி கண்டிபிடித்த போது, துட்டன்காமன் முகமூடியும் கண்டிபிடிக்கப்பட்டது. துட்டன்காமனின் மரண முகமூடி பண்டைய எகிப்தியர்களின் நாகரீகத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.[7][4]. எகிப்தியவியல் அறிஞர் நிக்கோலசு ரிவீசின் கூற்றுப்படி, துட்டன்காமன் மரண முகமூடியானது, பண்டைய எகிப்தின் மிகவும் பிரபலமான தொல்பொருள் ஆகும். ![]() படக்காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia