உபப்பிலாவியம்உபப்பிலாவியம் (Upaplavya), மகாபாரத்தின் உத்யோக பருவத்தில் உபப்பிலாயம் அரண்மனையில் பாண்டவர் முதலியோர் நடத்திய ஆலோசனைகள் குறித்து கூறப்படுகிறது. மத்ய நாட்டின் புறநகர் பகுதியான உபப்பிலாவியத்தில் பாண்டவர்கள் தங்குவதற்கு மத்சய நாட்டின் மன்னர் விராடன் நிறுவிய கூடாரம் போன்ற அரண்மனை ஆகும் மத்ய நாட்டு அரண்மனையில் ஓராண்டு அஞ்ஞாதவாசம் முடித்த பாண்டவர்கள், அத்தினாபுரம் மன்னர் திருதராட்டினிடம், தாங்கள் கௌரவர்களிடம் சூதாட்டத்தில் இழந்த நாட்டை திரும்பக் கோரவும், தூது செல்லவும் பாண்டவர்கள், கிருட்டிணன், பலராமர், துருபதன், விராடன் முதலானர்கள் நிறைந்த உபப்பிலாவியம் அரண்மனையில் ஆலோசனை நடத்தினர். உபப்பிலாவியத்திலிருந்து பாண்டவர்கள் சார்பாக திருதராட்டிரனை சந்தித்து, பாண்டவர்கள் சூதாட்டத்தில் இழந்த நாட்டை மீண்டு திரும்ப கொடுக்கமாறு அத்தினாபுரத்திற்கு கிருஷ்ணன் தூது செல்கிறான்.. சூதாட்ட ஒப்பந்தப்படி, பாண்டவர்கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கைக்கு முன்னர் வெளிப்பட்டபடியால், ஊசி முனை அளவு இடம் பாண்டவர்களுக்கு கொடுக்க துரியோதனன் மறுத்து விடுகிறான். எனவே உபப்பிலாவியம் அரண்மனையில் கூடியிருந்த சபையினர் போரில் கௌரவர்களை குருச்சேத்திரப் போரில் வென்று பாண்டவர்களின் இந்திரப்பிரஸ்தம் நாட்டை மீட்க படைகளை திரட்ட முடிவு செய்கின்றனர்.[1][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia