காந்தி மண்டபம், சென்னை![]() காந்தி மண்டபம் (Gandhi Mandapam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள அடையாறு பகுதியில் மகாத்மா காந்தியின் நினைவாக சர்தார் பட்டேல் சாலையில் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவிடம் ஆகும் [1][2][3]. இந்த வளாகத்தில் முதலில் கட்டப்பட்ட கட்டமைப்பு காந்தி மண்டபமாகும். அப்போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச்சாரி 1956 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள் இந்நினைவிடத்தைத் தொடங்கிவைத்தார். பின்னர் இச்சாலையில் சுதந்திரச் சிந்தனையாளர் இரட்டைமலை சீனிவாசன், முதலமைச்சர்கள் சி.இராசகோபாலாச்சாரி, காமராசர், எம். பக்தவத்சலம் ஆகியோருக்கும் நினைவிடங்கள் கட்டப்பட்டன [3]. இந்நினைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாக, பொது விழாக்களும், குறிப்பாக கலாச்சார உரையாடல்களுக்கும் இசை நிகழ்ச்சிகளும் நடத்த பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது [4][5]. சென்னை நகரத்தில் ஒரு சுற்றுலா பொழுதுபோக்கு பூங்காவாகவும் இம்மண்டபம் விளங்குகிறது [6]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia