கிந்தமா முனிவர்

பெண் மானை, ஆண் மான் உருவில் கிந்தமா முனிவர் புணரும் நேரத்தில் பாண்டு, ஆண் மானை அம்பெய்து வீழ்த்தும் காட்சி

கிந்தமா முனிவர் (Kindama) மகாபாரத இதிகாசம் கூறும் அட்டமா சித்திகள் பெற்ற ரிஷி ஆவார்.

கிந்தமா முனிவரின் சாபம்

கிந்தமா முனிவர் ஒரு முறை ஆண் மான் உருவமெடுத்து, ஒரு பெண் மானை புணர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், காட்டில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த குரு நாட்டின் மன்னன் பாண்டு, தனது கூரிய அம்பால், ஆண் மானை வீழ்த்தினான். அம்படியால் வீழ்ந்த ஆண் மான், உயிர் பிரியும் வேளையில் முனிவர் வடிவம் எடுத்த கிந்தமா முனிவர், பாண்டுவை நோக்கி, இனி எப்பெண்ணையாவது புணர்ந்தால், அப்போதே, அவ்விடத்திலே வீழ்ந்து மடிவாய் எனச் சாபமிட்டார்.[1] [2][3]

கிந்தமா முனிவரின் சாபத்தால், நகரம் திரும்பிய பாண்டு, அத்தினாபுரத்தின் அரியணையைத் தன் அண்ணன் திருதராட்டிரனிடம் ஒப்படைத்து விட்டு, தன் மனைவியர்களான குந்தி மற்றும் மாதுரியுடன் கானகம் ஏகி தவ வாழ்வு மேற்கொண்டான்.[4]

பாண்டவர்களின் பிறப்பு

பாண்டுவின் வற்புறுத்தலால் பிள்ளை பேறு வேண்டி, ஏற்கனவே துர்வாச முனிவர் தனக்குச் சொல்லிக் கொடுத்த மந்திர வலிமையால், குந்தி தருமன், பீமன் மற்றும் அருச்சுனன் எனும் மூவரை ஈன்றாள்.[5]

துர்வாசரின் மந்திரங்களை, குந்தி மாதுரிக்கு உபதேசம் செய்ததன் மூலம், மாதுரி நகுலன் மற்றும் சகாதேவனை ஈன்றாள்.

பாண்டுவின் மரணம்

ஒரு முறை மாத்திரி தனியாக இருந்த வேளையில், பாண்டு, கிந்தமா முனிவரின் சாபத்தை மறந்து, மாத்திரி மீது மையல் கொண்டு புணர, பாண்டு அவிடத்திலே இறந்து போனார்.[6]

மேற்கோள்கள்

  1. கிந்தமாவிடம் சாபம் பெற்ற பாண்டு! - ஆதிபர்வம் பகுதி 118
  2. Uberoi, Meera. The Mahabharata. ISBN 9788170702313.
  3. Pattanaik, Devdutt (2000). The goddess in India: the five faces of the eternal feminine. Rochester, Vt: Inner Traditions International. ISBN 9780892818075.
  4. வானப்பிரஸ்தம் ஏற்றான் பாண்டு - ஆதிபர்வம் பகுதி 119
  5. யுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 123
  6. பாண்டு மாத்ரி காமம் - ஆதிபர்வம் பகுதி 125
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya