அம்மாப்பேட்டை
அம்மாப்பேட்டை (ஆங்கிலம்:Ammapettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] அமைவிடம்அம்மாபேட்டை பேரூராட்சிக்கு அருகில் நீடாமங்கலம் 13 கீமீ; கிழக்கே திருவாரூர் 40 கி.மீ.; மேற்கே தஞ்சாவூர் 22 கி.மீ.; வடக்கே கும்பகோணம் 25 கி.மீ.; தெற்கே ஒரத்தநாடு 24 கி.மீ.; மன்னார்குடி 23 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 6 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,591 வீடுகளும், 14,572 மக்கள்தொகையும் கொண்டது. [6] [7] புவியியல்இவ்வூரின் அமைவிடம் 10°48′N 79°20′E / 10.8°N 79.33°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது. வெளி இணைப்புகள்்ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia