கே. சுதாகர்
கேசவ ரெட்டி சுதாகர் (K. Sudhakar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கருநாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். சுதாகர் 6 பிப்ரவரி 2020 முதல் கர்நாடகாவின் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார அமைச்சராகப் பணியாற்றுகிறார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் சார்பில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சிக்கபல்லப்பூரிலிருந்து கர்நாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019-ல் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] நான்காவது பி. எஸ். எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சர்களில் இளையவர் ஆவார். இவர் மீண்டும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மருத்துவக் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில், இவர் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மற்றும் சிலருடன் கர்நாடகாவிற்கான கோவிட்-19 குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர் முக்கிய கொள்கை உருவாக்கம் மற்றும் தொற்றுநோய்க்கான விரைவான நடவடிக்கையில் முக்கிய பங்கேற்பாளராக இருந்தார்.[4] சர்ச்சைகள்கமலா செயல்திட்டம்கமலா செயல்திட்டம் என்பது 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். முன்னாள் அமைச்சர் ஜி. ஜனார்த்தன ரெட்டி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தைத் தவிர்த்து, சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்கான செயல்படுத்திய நடைமுறை இதுவாகும்.[5][6][7][8][9] கமலா செயல் திட்டத்தில் 2019ஆம் ஆண்டில் எச்.டி.குமாரசாமி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையக் காரணமான சட்டப்பேரவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia