கோதண்டராம கோயில், திருப்பதி
இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் புனித நகரமான திருப்பதி நகரத்தில் உள்ள திருமலை வெங்கடாசலப்தி கோயிலுக்குப் பிறகு ஸ்ரீ கோதண்டராமசாமி கோயில் (Sri Kodandaramaswamy Temple) புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகும். சீதா மற்றும் இலட்சுமணருடன் விஷ்ணுவின் அவதாரமான இராமருக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமானுக்காக துணைக்கோயில் ஒன்றும் உள்ளது. வரலாறுபுராணவராக புராணத்தின் படி, திரேத யுகத்தின் போது, ஸ்ரீராமர் இலங்கையிலிருந்து திரும்பியபோது சீதா தேவி மற்றும் இலட்சுமணருடன் இங்கு வசித்து வந்தார். இடைக்கால வரலாறுஇது கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது.[2] நிர்வாகம்இன்றைய கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தால் பராமரிக்கப்படுகிறது. பண்டிகைகள்ஸ்ரீராம நவமி தினத்தில் அனுமந்த வாகன சேவையும், தசமியில் ஸ்ரீசீதா இராமகல்யாணமும், ஏகாதசியில் ஸ்ரீராம பட்டாபிஷேக மகோத்சவமும் அடங்கிய இந்த கோயிலில் இராமநவாமி பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் கொண்டாடப்படும் ஒன்பது நாள் வருடாந்திர பிரம்மோத்வங்கள் கோயிலின் மற்றொரு மிகப்பெரிய நிகழ்வாகும். ஸ்ரீராமச்சந்திர புட்கரிணியில் தெப்பம் ஒன்றில் ஸ்ரீராமரின் ஊர்வலமும் சீதா மற்றும் லட்சுமணனுடன் ஏப்ரல் மாதத்தில் கோவிலில் வருடாந்திர மூன்று நாள் தெப்போட்சவங்கள் (மிதவை திருவிழா) கொண்டாடப்படும். மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia