திருப்பதி மாவட்டம்
திருப்பதி மாவட்டம் (Tirupati district), ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் தலைமையிடம் திருப்பதி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி வருவாய் கோட்டம் மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் நாயுடு பேட்டை வருவாய் கோட்டம் மற்றும் கூடூர் வருவாய் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[3][4][4][5] 9,174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 22.18 இலட்சம் ஆகும். மாவட்ட நிர்வாகப் பிரிவுகள்திருப்பதி மாவட்டம் கூடூர், சூலூர் பேட்டை, ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் திருப்பதி என 4 வருவாய் கோட்டங்களையும், 34 மண்டல்களையும், 784 கிராம ஊராட்சிகளையும் 5 நகராட்சிகளையும் மற்றும் திருப்பதி மாநகராட்சியும் கொண்டுள்ளது. மண்டல்கள்
அரசியல்![]() ![]() இம்மாவட்டம் சித்தூர் மக்களவைத் தொகுதி(பகுதி) மற்றும் திருப்பதி மக்களவைத் தொகுதி கொண்டது. மேலும் இம்மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளது.[6]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia