திருப்பதி மாநகராட்சி
திருப்பதி மாநகராட்சி (Tirupati Municipal Corporation) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் திருப்பதி நகரத்தை நிர்வகிக்கும் குடிமை அமைப்பாகும்.[1] ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் மாநில மாநகரங்களான காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினத்துடன் இணைந்து மூன்றாவது மாநகராகத் திருப்பதியும் உள்ளது.[2] காலவரிசைதிருப்பதி நகராட்சியாக 1886 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது. நகராட்சி பல ஆண்டுகளாகப் பல தரங்களைக் கண்டது மற்றும் மார்ச் 2, 2007 அன்று மாநகர் நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதனைக் கீழ்வரும் அட்டவணையில் காணலாம்:[1][3]
குடிமை நிர்வாகம்திருப்பதி மாநகராட்சியின் பரப்பளவு சுமார்16.59 km2 (6.41 sq mi) ஆகும். இது விரிவாக்கத்திற்குப் பிறகு தற்போதைய சூழலில் 27.44 km2 (10.59 sq mi) உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருப்பதியின் மக்கள் தொகை 374,260 ஆகும். மாநகரின் தற்போதைய ஆணையாளர் பி. எஸ். கிரிசா இ. ஆ. ப. ஆவார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia