கோலாலம்பூர் விளையாட்டு நகரம்
கோலாலம்பூர் விளையாட்டு நகரம் (மலாய்:Bandaraya Sukan Kuala Lumpur; ஆங்கிலம்:KL Sports City) என்பது மலேசியா, கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு நகரம்; மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய விளையாட்டு வளாகமும் ஆகும். இந்த விளையாட்டு நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 20 கி.மீ. தெற்கே உள்ளது. "ஒரு பூங்காவில் உள்ள விளையாட்டு வளாகம்" என்று அழைக்கப்படும் இந்த நகரம், மலேசியாவில் மட்டும் அல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலும் ஒரே விளையாட்டு நகரம் எனவும் அறியப்படுகிறது. பொதுஇந்த நிலையம், 1998-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு (1998 Commonwealth Games) முன்னதாக 11 சூலை 1998 அன்று, மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் காமன்வெல்த் விளையாட்டுகளின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த வளாகம் 2017-ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக (2017 Southeast Asian Games) கோலாலம்பூர் விளையாட்டு நகரமாக மேம்படுத்தப்பட்டது.[2][3] அணுகல்இந்த விளையாட்டு நகரத்திற்கான அணுகல் வழிகள்:
கட்டமைப்புகோலாலம்பூர் விளையாட்டு நகரத்தில் உள்ள கட்டமைப்புகளும் வசதிகளும்:
காட்சியகம்கோலாலம்பூர் விளையாட்டு நகரத்தின் காட்சிப் படங்கள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia