இம்பி நிலையம்
இம்பி நிலையம் (ஆங்கிலம்: Imbi Station; மலாய்: Stesen Imbi; சீனம்: 燕美站) என்பது மலேசியா, கோலாலம்பூர், இம்பி சாலை, கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.[1] இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள்) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[2] பொதுஇம்பி சாலையின் பெயரால் இம்பி நிலையம் பெயரிடப்பட்டது. கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் நிலையங்களில் இம்பி நிலையமும் ஒன்றாகும். கோலாலம்பூர் பெர்ஜெயா சதுக்கத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள இம்பி சாலையின் மீது நேரடியாகவும், பிளாசா பெர்ஜெயா கோபுரத்திற்கு கிழக்கு திசையிலும் அமைந்துள்ளது. இந்த நிலையம் செயல்படத் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகுதான் கோலாலம்பூர் பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம் திறக்கப்பட்டது.[3] புக்கிட் பிந்தாங் நகர மையம்இந்த நிலையத்தில் மொத்தம் ஐந்து வெளியேறு வழிகள் உள்ளன. நிலையத்தின் மேற்குப் புறத்தில் இரண்டு வெளியேறு வழிகள் உள்ளன. அவை பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கம்; மற்றும் சாலையின் எதிர்ப் பக்கத்தில் உள்ள பெர்ஜெயா கோபுரத்திற்கும் செல்கின்றன; மீதமுள்ள இரண்டு வெளியேறு வழிகளும் கிழக்குப் பகுதியை நோக்கி இம்பி சாலையின் இருபுறமும் செல்கின்றன.[4] இம்பி நிலையம், புக்கிட் பிந்தாங் நகர மையம் கடைவல மையங்களுக்கு அருகிலேயே உள்ளது. அந்த வகையில், லோ யாட் பிளாசா (Plaza Low Yat), இம்பி பிளாசா, சுங்கை வாங் பிளாசா (Sungei Wang Plaza); மற்றும் கோலாலம்பூர் பெவிலியன் ஆகியவை புக்கிட் பிந்தாங் நகர மையத்திற்குள் உள்ளன. பல வணிகக் கட்டிடங்கள் இம்பி நிலையத்திற்கு அருகில் அமைந்து இருப்பதின் காரணமாக, வேலை நாட்களிலும் சரி; வேலை இல்லாத நாட்களிலும் சரி; இந்த நிலையம் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைப் பெறுகிறது. அத்துடன் இந்த நிலையத்தில் மட்டும் பேருந்து இணைப்புகள் எதுவும் இல்லை என்பது ஒரு முக்கியமான செய்தி ஆகும். நிலைய தள அமைப்பு
காட்சியகம்இம்பி நிலையக் காட்சிப் படங்கள்:
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia