எக்சோன் மோபில் கோபுரம்
எக்சோன் மோபில் கோபுரம் (மலாய்; Menara ExxonMobil; ஆங்கிலம்: ExxonMobil Tower) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையத்தில் அமைந்துள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும். முன்பு மெனாரா எஸ்ஸோ (Menara Esso) என்று அழைக்கப்பட்டது.[2] இந்தக் கட்டிடம் தற்போது மலேசிய எக்சோன் மோபில் (ExxonMobil Malaysia) நிறுவனத்தின் தலைமையகமாக உள்ளது. பொதுஇந்த எக்சோன் மோபில் கோபுரம்தான், கோலாலம்பூர் மாநகர மையத்தில் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டிடமாகும்.[3] இந்தக் கோபுரத்தை கட்டிய பிறகுதான், கேஎல்சிசி பூங்கா, சூரியா கேஎல்சிசி, மெக்சிஸ் கோபுரம், பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்பட்டன.[4] 30-அடுக்கு மாடிகளைக் கொண்ட எக்சோன் மோபில் கோபுரம், செவ்வக வடிவத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் உயரம் 126 மீ (413 அடி). அமைவுஎக்சோன் மோபில் கோபுரத்தின் சுற்றுப்புறங்கள் மென்மையான இயற்கைத் தன்மையைப் பிரதிபலிகின்றன. இங்கிருந்து கேஎல்சிசி பூங்காவிற்குச் செல்லும் நடைபாதையின் இரு மருங்கிலும் அழகிய மரங்கள் வரிசை வரிசையாக நடப்பட்டு உள்ளன. காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia