தொலைத்தொடர்பு, இசுலாமிய பிறை வானோக்கு நிலையம், துணிவுச்செயல் (வான் குதித்தல்), சுற்றுலா, பண்பாடு in கோலாலம்பூர், மலேசியா{{SHORTDESC:தொலைத்தொடர்பு, இசுலாமிய பிறை வானோக்கு நிலையம், துணிவுச்செயல் (வான் குதித்தல்), சுற்றுலா, பண்பாடு in கோலாலம்பூர், மலேசியா|noreplace}}
கோலாலம்பூர் கோபுரம் அல்லது கேஎல் கோபுரம் (மலாய்; Menara Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Tower) என்பது மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் உயரமான கோபுரக் கட்டிடமாகும். இதன் கட்டுமானம் 1995-இல் முடிவடைந்தது. இது தொலைத்தொடர்பு கட்டமைப்பிற்காகக் கட்டப்பட்டது.
பொது
தொலைத்தொடர்பிற்கான வானலை வாங்கிகள் 421 மீ (1,381 அடி) உயரத்தில் அமைந்துள்ளன. இவற்றின் இலத்திரனியல் கருவிகள் கொண்டுள்ள கட்டிடத்தொகுதியின் உயரம் 335 மீ (1,099 அடி)யில் உள்ளது.
இதன் கீழுள்ள கோபுரம் நேரடிக் கிணறு போல அமைந்துள்ளது. உணவருந்திக் கொண்டே நகரின் எழில்மிகு காட்சியைக் கண்டு களிக்க உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றும் உணவகம் உள்ளது. இதற்குச் செல்ல உயர்த்தி ஒன்று உள்ளது.
காட்சிமுனை
படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் செல்வதற்கு ஆண்டுதோறும் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. கோபுரம் இசுலாமிய மாதங்களைக் குறிக்கும் நிலவின் பிறைகளைக் காணவும் வானோக்கியாக பயன்படுகிறது.
பொதுமக்கள் சென்று காணக்கூடிய மிக உயர்ந்த காட்சிமுனையாக இது விளங்குகிறது. மேலும் இந்தக் கோபுரம் கோலாலம்பூரின் வான்வெளியை அடையாளப்படுத்தும் சின்னமாக பெட்ரோனாஸ் கோபுரங்களுடன் போட்டியிடுகிறது.