கேஎல்சிசி பூங்கா
கேஎல்சிசி பூங்கா (மலாய்: KLCC Park; ஆங்கிலம்: Taman KLCC; சீனம்:吉隆坡城中城公園) என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் நகர மையத்தில் அமைந்துள்ள பொதுப் பூங்கா ஆகும்.[1] பெட்ரோனாஸ் கோபுரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பசுமையை வழங்கும் வகையில் கேஎல்சிசி பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.[2] இயற்கையுடன் மனிதனின் படைப்புகளை ஒருங்கிணைத்து வெப்பமண்டலப் பசுமையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பூங்கா உருவாக்கப் பட்டதாகவும் அறியப்படுகிறது.[3] பொதுஇந்தப் பூங்காவை வடிவமைத்தவர் பிரேசிலிய கட்டிடக் கலைஞர் ராபர்டோ பர்லே மார்க்ஸ் (Roberto Burle Marx). அவரால் மேற்கொள்ளப்பட்ட கடைசி வடிவமைப்பு என்றும் அறியப்படுகிறது. பூங்கா வடிவமைக்கப்பட்டபோது, 'இயற்கையின் முக்கியத்துவத்தை மேலும் அறிய வேண்டிய உணர்திறன் மனுக்குலத்திற்கு வேண்டும்' என்பதே அதன் முதன்மை நோக்கமாக இருந்தது.[4] பசுமைப் பகுதிகள்மரங்கள், புதர்கள், கற்கள், நீர்க் கூறுகள் போன்ற இயற்கைக் கூறுகளின் பல சேர்க்கைகளை இந்தப் பூங்கா கொண்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் நிலப்பரப்பின் கூறுகள், அந்தப் பூங்காவிற்கு வான்வெளித் தோற்றத்தை வழங்குவது போன்ற நிலைப்பாட்டில் உருவாக்கப்பட்டன. இந்தப் பூங்காவில் ஓர் அழகான ஏரி உள்ளது; மற்றும் நகரத்தின் சலசலப்பிலிருந்து சற்றே விலகிச் செல்வதற்கு இந்தப் பூங்காவில் ஏராளமான பசுமைப் பகுதிகளும் உள்ளன; குழந்தைகளுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விளையட்டுத் தளங்களும் உள்ளன. கேஎல்சிசி பூங்கா காட்சியகம்மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia