துன் சம்பந்தன் நிலையம் (ஆங்கிலம் : Tun Sambanthan Station ; மலாய் : Stesen Tun Sambanthan ; சீனம் : 敦善班丹站) என்பது மலேசியா , கோலாலம்பூர் , பிரிக்பீல்ட்ஸ் , கோலாலம்பூர் மோனோரெயில் வழித்தடத்தில் (KL Monorail) அமைந்துள்ள ஓர் ஒற்றைத் தண்டூர்தி நிலையமாகும்.
இந்த நிலையம் ஆகத்து 31, 2003 (மலேசிய விடுதலை நாள் ) அன்று; மற்ற மோனோரெயில் நிலையங்களுடன் திறக்கப்பட்டது.[ 1]
இந்த நிலையம் கோலாலம்பூர் , பிரிக்பீல்ட்ஸ் மாவட்டத்தில் உள்ள துன் சம்பந்தன் சாலை 4 -இன் தெபிங் சாலைச் சந்திப்பின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த நிலையம் கிள்ளான் ஆற்றின் மேற்குப் பகுதியில், கோலாலம்பூர் மெதடிஸ்ட் கல்லூரி மற்றும் மலேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு (Malaysian Association of the Blind) அருகிலும் உள்ளது.[ 2]
இந்த நிலையம் கிள்ளான் ஆற்றைக் கடக்கும் ஒரு பாதசாரி பாலத்திற்கு அருகில் உள்ளதால், அந்தப் பாதசாரி பாலத்தின் வழியாக சையத் புத்ரா சாலையையும் இணைக்கிறது. அந்த வகையில், சையத் புத்ரா சாலை, கிள்ளான் ஆற்றின் எதிரே உள்ள கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகிறது.
பொது
மலேசிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் வீ. தி. சம்பந்தன் அவர்களின் பெயரால் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் , பிரிக்பீல்ட்ஸில் உள்ள ஒரு முக்கிய சாலையான துன் சம்பந்தன் சாலைக்கும் , துன் வீ. தி. சம்பந்தனின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சாலை கோலாலம்பூர் சென்ட்ரல் மோனோரெயில் முனையத்தின் அமைவிடமாகவும் திகழ்கிறது.[ 3]
துன் சம்பந்தன்
துன் சம்பந்தன் அவர்களின் இயற்பெயர் வீராசாமி திருஞான சம்பந்தன் (பிறப்பு: ஜூன் 16 , 1919 - இறப்பு: மே 18 , 1979 ). மலேசிய இந்தியர்ச் சமுதாயத்தின், தனிப்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர். மலேசிய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுகளில், அமைச்சர் பதவிகளை வகித்த இவர், மலேசியாவின் மிக உயரிய விருதான , துன் விருதைப் பெற்ற முதல் தமிழரும் ஆவார்.
அன்றைய மலேசியா (மலாயா ) பிரித்தானியர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு, மலாயா இந்திய மக்களின் சார்பாளராக இலண்டன் சென்று மலாயா விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட்டு வந்த மலாயா நாட்டின் தலைவர்களில், துன் சம்பந்தன் அவர்களும் ஒருவர் ஆவார்.[ 4]
நிலைய தள அமைப்பு
L2
தள நிலை
பக்க மேடை
தளம் 1 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR11 தித்திவங்சா நிலையம் (→)
தளம் 2 8 கோலாலம்பூர் மோனோரெயில் → MR1 கோலாலம்பூர் சென்ட்ரல் (←)
பக்க மேடை
L1
இணைப்புவழி
படிக்கட்டு
G
அலுவலகம்/தெரு நிலை
கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, மோனோரெயில் நிலையக் கட்டுப்பாடு, கடைகள், வாடகை வாகனங்கள் முனையம், பாதசாரி கடப்பு. நுழைவாயில் A
நுழைவாயில்கள்
இந்த நிலையத்தில் ஒரே ஒரு வெளியேறு வழி மட்டுமே உள்ளது.
காட்சியகம்
துன் சம்பந்தன் நிலையக் காட்சிப் படங்கள்:
நுழைவாயில் 1 (2021)
முகப்பு (2007)
மின்படிக்கட்டுகள் (2021)
நுழைவாயில் 2 (2021)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கண்ணோட்டம்
பயணச்சீட்டு
அடையாள நாணயம்
தொட்டு செல் அட்டை
பயணி இணைப்பு அட்டை
(KTMi-Card)
பற்று அட்டை
ஆணையம்
நில பொதுப் போக்குவரத்து நிறுவனம் (Land Public Transport Agency)
முக்கிய சேவை நகரிடை ஊர்தி
முக்கிய வழிகள்
தற்சமயம் எதிர்காலத்தில்
எம்.ஆர்.எல். கிழக்கு கடற்கரை தொடர் இணைப்பு (MRL East Coast Rail Link)
திட்டங்கள்
வட கிழக்கு சபா இரயில் தடம்
சரவாக் இரயில் தடம்
ஒத்திவைப்பு
கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக இரயில்
சேவைகள்
பயணிகள் சேவை
மாநகர் தொடருந்து
இலகு தொடருந்து
தற்போதைய எதிர்காலத்தில் திட்டங்கள்
எம்ஆர்டி
தற்போது எதிர்காலத்தில் திட்டங்கள்
CC13 சுற்றுத் தடம் (MRT Circle Line)
மோனோ ரெயில்
தற்சமயம்
கோலாலம்பூர் மொனோ தொடருந்து (KL Monorail)
மலாக்கா மொனோ தொடருந்து (Melaka Monorail)
திட்டங்கள்
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Putrajaya Monorail)
புத்ரா ஜெயா மொனோ தொடருந்து (Kota Kinabalu Monorail)
எல்லை இணைப்பு
தற்சமயம் எதிர்காலத்தில்
ஜொகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு
இதர சேவைகள்
சேவைகள்
KLIA Aerotrain
மலை தொடருந்து கோண்டோலா
லங்காவி
கெந்திங் மலை
அவானா
சேவைகள்
இன்டர்-சிட்டி
KTM வகுப்பு 23
KTM வகுப்பு 24
KTM வகுப்பு 25
YDM4
KTM வகுப்பு 91 EMU
KTM வகுப்பு 93 EMU
KTM வகுப்பு 61 DMU
கவாசாகி டீசல் இயந்திரங்கள் DMU
பயணிகள்
KTM வகுப்பு 81 EMU
KTM வகுப்பு 83 EMU
KTM வகுப்பு 92 EMU
இணைப்புகள்
சாங்லூன் இரயில் சேவை (CNR Changchun ERL)
சீமென்ஸ் மலேசியா (Siemens Desiro ET 425 M )
(Hyundai Rotem KTM Class 83 EMU)
எல்ஆர்டி எம்ஆர்டி Monorail வேறு
சாவடிகள்
தற்சமயம்
அம்பாங்
பத்து காஜா
புக்கிட் தெங்கா
பிரிக்பீல்ட்ஸ்
காஜாங்
ரவாங்
சாலாக் திங்கி
செந்தூல்
சிரம்பான்
சுபாங்
சுங்கை பூலோ
தஞ்சோங் அரு
எதிர்காலத்தில்
ஜொகான் செத்தியா (Johan Setia Depot)
செர்டாங் (Serdang Depot)
தொடர்பு
பெரும் கோலாலம்பூர்/கிள்ளான் பள்ளத்தாக்கு தொடருந்து நிலையங்கள்
கட்டம் 1
திறப்பு 2025
கட்டம் 2
சாய்வு எழுத்துகளில் உள்ள நிலையங்களும் சேவைகளும் திட்டமிடப்பட்டுள்ளன அல்லது கட்டுமானத்தில் உள்ளன