கோலா குபு பாரு மருத்துவமனை
கோலா குபு பாரு மருத்துவமனை (மலாய்: Hospital Kajang; ஆங்கிலம்: Kajang Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டம், கோலா குபு பாரு நகர்ப் பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மாவட்ட மருத்துவமனை ஆகும். சிலாங்கூர், உலு சிலாங்கூர் மாவட்டத்தின் மேற்கில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, கோலா குபு பாரு, கெர்லிங், ராசா, பத்தாங்காலி, அம்பாங் பெச்சா பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவச் சேவைகளை வழங்குகிறது. பொதுகோலா குபு பாரு மருத்துவமனை மருத்துவச் சிறப்பு சேவைகளை வழங்கும் ஒரு மாவட்ட மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள ஏழு நோயாளிக் கூடங்களில் (வார்டுகளில்) 150 படுக்கைகள் உள்ளன. கோலா குபு பாரு மருத்துவமனை 13 முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2] வரலாறுகோலா குபு பாரு மருத்துவமனை 1936-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. பழைய கோலா குபு நகரம் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட பிறகு இந்த மருத்துவமனை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது. அந்தக் கட்டத்தில், இந்த மருத்துவமனை கோலா குபு பாரு பகுதியைச் சுற்றியுள்ள பிரித்தானிய வீரர்கள், ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சேவை செய்தது. தொடக்கத்தில், இந்த மருத்துவமனை 4 வார்டுகள், ஒரு நிர்வாக கட்டிடம் / வெளிநோயாளர் பிரிவு மற்றும் ஓர் அறுவை சிகிச்சை அறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த மருத்துவமனையின் தற்போதைய பரப்பளவு 37 ஏக்கர்; மற்றும் கட்டமைப்புகள் கொண்ட பகுதி ஏறக்குறைய 16 ஏக்கர் ஆகும்.[2][3] புள்ளிவிவரங்கள்2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[4]
முகவரிHospital Kuala Kubu Bharu இணையத் தளம்: jknselangor மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia