உலு சிலாங்கூர் மாவட்டம்
உலு சிலாங்கூர் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Hulu Selangor; ஆங்கிலம்: Hulu Selangor District; சீனம்: 乌鲁雪兰莪县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் பகாங் மாநிலம்; வட மேற்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; தென் மேற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. உலு சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: செரண்டா; பத்தாங்காலி; கோலா குபு பாரு. இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா குபு பாரு ஆகும்.[2] சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தில் தான் உற்பத்தியாகிறது. எனவே இந்த மாவட்டத்திற்கும் அந்த நதியின் பெயரே வைக்கப்பட்டு உள்ளது.[3] நிர்வாகப் பகுதிகள்உலு சிலாங்கூர் மாவட்டம், உலு சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது. உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
மக்கள் தொகையியல்மலேசியப் புள்ளியியல் துறை 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கிய புள்ளிவிவரங்கள்:[4]
மலேசிய நாடாளுமன்றம்மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) உலு சிலாங்கூர் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.[5]
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் உலு சிலாங்கூர் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[6]
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதிகள்![]() மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia