சுங்கை பூலோ மருத்துவமனை
சுங்கை பூலோ மருத்துவமனை (மலாய்: Hospital Sungai Buloh; ஆங்கிலம்: Serdang Hospital அல்லது Sungai Buloh Hospital) என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் அரசு பொது மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை 130 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய வளாகம் ஏறக்குறைய 141,000 சதுர அடி (13,100 மீ2) பரப்பளவைக் கொண்டது.[2] 2.80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கோம்பாக் மாவட்டம், பெட்டாலிங் மாவட்டம், மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் இந்த மருத்துவமனை சேவை செய்கிறது.[3] பொதுசுங்கை பூலோ மருத்துவமனை 1999-இல் உருவாக்கப்பட்டது; மற்றும் கூடுதலாகி வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கோலாலம்பூர் மருத்துவமனையில் நோயாளிகளின் வருகையைக் குறைக்கவும், இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.[3] துனாஸ் செலாத்தான் (Tunas Selatan Sdn Bhd) என்ற நிறுவனத்தால் 2006-ஆம் ஆண்டில் இந்த மருத்துவமனைக்கான மறு கட்டுமானம் நடைபெற்றது; மற்றும் இந்த மருத்துவமனை கட்டப்படுவதற்கு RM 1.3 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவானது.[4] மறு கட்டுமானத்திற்கான அனைத்துச் செலவுகளையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. சிறப்புகள்
ஆகிய 8 வகை சிகிச்சைகளுக்கான சிறந்த மையமாக சுங்கை பூலோ மருத்துவமனை அடையாளம் காணப்பட்டுள்ளது.[5] விருதுகள் மற்றும் சாதனைகள்
முகவரிHospital Sungai Buloh காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia