தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை
தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை அல்லது கிள்ளான் மருத்துவமனை (மலாய்: Hospital Besar Tengku Ampuan Rahimah, Klang அல்லது Hospital Tengku Ampuan Rahimah; ஆங்கிலம்: Tengku Ampuan Rahimah (TAR) Hospital) அல்லது Klang General Hospital (Klang GH) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் நகர்ப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும்.[1] சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தின் தெற்கில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, கிள்ளான் பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பந்திங் மருத்துவமனை, சா ஆலாம் மருத்துவமனை, காஜாங் மருத்துவமனை, மற்றும் கோலா சிலாங்கூர் மருத்துவமனை போன்ற பிற மருத்துவமனைகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.[2] பொது1258 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 4,025 (2016) மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். உள்நோயாளிகள் சேர்க்கை (Inpatients admission) மற்றும் வெளிநோயாளிகளுக்கான (Outpatients) மருத்துவ வசதிகளின் அடிப்படையில் மலேசியாவில் இரண்டாவது பரபரப்பான மருத்துவமனையாக அறியப்படுகிறது.[3][4] இந்த மருத்துவமனை முதன்மை நிலை; மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது. 1985-இல் செயல்படத் தொடங்கிய இந்த மருத்துவமனை, இசுதானா ஆலாம் சா அரண்மனைக்கும் மற்றும் பண்டார் புக்கிட் திங்கி நகரத்திற்கும் மிக அருகில் அமைந்துள்ளது. சிலாங்கூர் சுல்தான் சலாவுதீனின் மனைவி தெங்கு அம்புவான் ரகிமாவின் (Tengku Ampuan Rahimah) நினைவாக இந்த மருத்துவமனைக்குப் பெயரிடப்பட்டது. அவசரகால சேவைகள்தெங்கு அம்புவான் ரகிமா பொது மருத்துவமனையானது 28 நோயாளிக் கூடங்களை (வார்டுகள்) கொண்ட மலேசிய அரசாங்க மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை ஏறக்குறைய 1258 உள்நோயாளிகள் படுக்கைகள் மற்றும் 20 மருத்துவப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் 79729 பேர் நோயாளிகள் படுக்கைகளைப் பயன்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 22,000 நோயாளிகள் மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர். மற்றும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. 1998-இல் ஐஎஸ்ஓ 9000 (MS ISO 9001) தர அமைப்புச் சான்றிதழ் விருதைப் பெற்ற இந்த மருத்துவமனை நடமாடும் சேவைகளிலும் கவனம் செலுத்துகிறது. மற்றும் அவசரகால சேவைகளுக்காக உலங்கூர்தித் தளமும் இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. மலாயா பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவக் கற்பித்தல் வசதியும் தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. புள்ளிவிவரங்கள்2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[5]
காட்சியகம்
முகவரிHospital Tengku Ampuan Rahimah மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia