வேங்கடரமண பாகவதர்![]() வேங்கடரமண பாகவதர் (18-2-1781 - 18-12-1874) சௌராட்டிர மொழி, தமிழ், சமஸ்கிருத மொழி மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமையும், கருநாடக பக்தி இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர்.[1] தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்போட்டையில், குப்பையா நன்னுசுவாமி பாகதவருக்கு ஐந்தாம் மகனாகப் பிறந்தவர்.இவரும், இவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரும் தியாகராஜ சுவாமியின் சீடர்களாக விளங்கியவர்கள். [2] வாழ்நாள் சாதனைகள்இவர் தியாகராஜரின் தலைமை மாணவர் ஆவார். தெலுங்கு மற்றும் சௌராட்டிர மொழியில் பல்வேறு பக்திக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்கு கீர்த்தனைகளின் இறுதியில் தியாகராஜ என்ற முத்திரையிட்டுக் குரு காணிக்கையாக செலுத்தியுள்ளார்.[3][4] தியாகராச சுவாமிகள் தெலுங்கு மொழியில் இயற்றிய நௌகா சரிதம் எனும் நூலை, வேங்கடரமண பாகவதவர் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்துள்ளார். தியாகராஜர் மறைவுக்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டைக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவத நூல், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகளை பாதுகாத்து வந்தார். வேங்கடரமணரின் மறைவிற்குப் பின் அவரிடம் ஏட்டுச் சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மதுரை சௌராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செளராட்டிரர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.[5][6] [7] வேங்கடரமணரின் கர்நாடக பக்தி இசையை பாராட்டி, அவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது.[8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia