சோகாமேளர் (கிருஷ்ண பக்தர்)
![]() சோகாமேளர் (Chokhamela) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பண்டரிபுரம் பான்டுரங்க விட்டலர் கோயிலில் குடிகொண்டுள்ள விட்டலரின் பக்தர் ஆவார். சோகாமேளர் பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில், தற்போதைய மகாராட்டிரா மாநிலத்தின் புல்டாணா மாவட்டம், தியோல்காவ்ன் இராஜா தாலுகாவில் உள்ள மெகுனா இராஜா எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மகர் சமூகத்தில் பிறந்தவர் ஆவார். நாமதேவரைப் பின்பற்றி சோகாமேளர் தனது மனைவி சோயாராபாய் மற்றும் மகன் கர்மமேளாவுடன் விட்டலர் கோயில் கொண்டுள்ள பண்டரிபுரத்தில் வைணவ வர்க்காரி நெறிகளுடன் வாழ்ந்தவர்.[1] சோகாமேளர் விட்டலரைத் துதித்து அதிக பதிகங்களைப் பாடியுள்ளார். வரலாறுதாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சோகாமேளர் பண்டரிபுரத்தில் உள்ள விட்டலர் கோயிலுக்குள் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்டது.[2] பழமைவாதிகளான பிராமணர்கள் அவரை உளரீதியாகப் பலவிதத்திலும் துன்புறுத்தினர். ஆனாலும், சோகாமேளரின் கடும் விட்டலர் வழிபாட்டினால், அவர் முன் தோன்றினார். அத்துடன் அவரின் குடிசைக்கு நாள்தோறும் சென்று சோகாமேளர் பரிமாறிய உணவையும் உண்டார். இதனையறிந்த பழமைவாதிகள் சோகாமேளரைத் தாக்கினர். ஆனாலும் பாண்டுரங்க விட்டலர் கோயிலில் சில அதிசயங்கள் நிகழ்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தனர். சோகாமேளர் தாக்குதலுக்குள்ளக்கப்பட்ட அதே நாளில் சோகாமேளருக்கு ஏற்பட்டிருந்த உடற்காயம் போன்ற அதே காயம், கோயிலில் இருந்த விட்டலர் சிலையிலும் ஏற்பட்டிருந்தது. தமது மடமையை உணர்ந்த பழமைவாதிகள் சோகாமேளரிடம் மன்னிப்புக் கேட்டு, கோயிலினுள் அவரை செல்ல அனுமதித்தனர்.[3][4] இதனையும் காண்கதிரைப்படம்சோகாமேளர் வரலாற்றை தமிழில் சோகாமேளர் எனும் பெயரில் 1942-இல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நூல்கள்
Hundred Poems of Mela, translated from Marathi by Chandrakant Kaluram Mhatre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5212-597-5 மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia