சக்ராதா
![]() ![]() ![]() சக்கரதா (Chakrata) இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் அமைந்த இராணுவப் பாசறை நகரம் ஆகும்.[1] இந்நகரம் டோன்ஸ் ஆறு மற்றும் யமுனை ஆற்றின் நடுவில், இமயமலையில் 2118 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது டேராடூன் நகரத்திலிருந்து 98 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்கில் இமாச்சல பிரதேசம், கிழக்கில் முசோரி (73 கி.மீ.) மற்றும் கார்வால் கோட்டம் அமைந்துள்ள்து. இவ்வூரில் சிறப்பு எல்லைப்புறப் படையின் தலைமையகம் உள்ளது. இராணுவப் பாசறை உள்ளாட்சிக் குழுபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் இவ்விடத்தில் 1886-இல் பிரித்தானிய இந்திய இராணுவத்தின் பாசறை நிறுவப்பட்டது.[2] 6 வார்டுகளும், 12 உறுப்பினர்களும் கொண்ட குழு, சக்கரதா பாசறை நகரத்தின் உள்ளாட்சி அமைப்பை நிர்வகிக்கிறது.[3] மக்கள் தொகை பரம்பல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 759 வீடுகளும், 15.70 சதுர கிலோ மீட்டர் பரப்பும் கொண்ட சக்கரதா இராணுவப் பாசறை நகரத்தின் மொத்த மக்கள்தொகை 5,117 ஆகும். அதில் ஆண்கள் 3,717 மற்றும் 1,400 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 377 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 367 (7.17%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.38% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 57.30%, இசுலாமியர் 1.54%, பௌத்தர்கள் 38.28%, சமணர்கள் 0.80%, கிறித்தவர்கள் 0.68% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[4] இவ்வூரில் இந்தி மொழியுடன், இவ்வட்டார மொழியான ஜௌன்சரி மொழியும் பேசுகின்றனர்.[5][6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia