சந்தியாவந்தனம் (இந்து சமயம்)சந்தியாவந்தனம் (Sandhyavandanam) , ஒரு நாளைக்கு மூன்று வேளைகளில் சூரியனை பகவானை நினைத்து காயத்திரி மந்திரத்தை ஜெபம் செய்வதாகும்.[1] முதல் சந்தியாவந்தனம் இரவும் பகலும் சந்திக்கும் விடியற்காலைப் பொழுதில் சூரியோதயத்துக்கு முன் (காலை மணி 5.00 முதல் 5.45 வரை) பிராத சந்தியாவந்தனம் செய்யப்படும். இரண்டாவதாக சூரியன் உச்சி வானில் இருக்கும் பொழுதில் மாத்யானிக சந்தியாவந்தனம் (மதியம் 12.00 முதல் 12.30 வரை) செய்யப்படும். மூன்றாவதாக பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு பொழுது புலரும் (மாலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்) காலத்தில் சாயம் சந்தியாவந்தனம் செய்யப்படும். சந்தியாவந்தனத்தை உபநயனம் ஆன அனைவரும் அன்றாடம் செய்ய வேண்டிய செயல் ஆகும். சந்தியாவந்தனம் என்பது உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டுக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடிய செயலாகும். நாம் செய்யும் சந்தியாவந்தனம் அர்க்யம், ஜபம் வலிமையில் தான் சூரியனின் தேர் தங்கு தடையின்றி ஓட வேண்டும் என்ற நம்பிக்கையாகும்.[2] சந்தியா என்பதன் பொருள்சர் மானியர்-வில்லியம்சு சந்தியா என்றால் அந்தி (இரவுக்கும் பகலுக்கும் இடையிலான காலம்) என்றும், "மேற்கூறிய மூன்று பிரிவுகளில் பிராமணர்களும் இருமுறை பிறந்த ஆண்களும் செய்யும் மதச் செயல்கள்" என்றும் மொழிபெயர்த்தார்.[3] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இதர விடயங்கள்தியானப் பயிற்சிகளுடனான தொடர்பைப் பொறுத்தவரை, மானியர் வில்லியம்ஸ் குறிப்பிடுகையில், தியானத்தின் ஒரு செயலாகக் கருதப்பட்டால், சந்தியா என்ற சொல் சொற்பிறப்பியல் ரீதியாக san-dhyai உடன் தொடர்புடையதாக இருக்கலாம். [1] பயிற்சியாளரின் நம்பிக்கை முறையைப் பொறுத்து சுமார்த்த, வைணவம், மத்துவம் சிலசில மந்திரங்கள், நடைமுறைகள் சற்று மாறுபடலாம், இருப்பினும் மார்ஜனம் (தண்ணீர் தெளித்தல்), ப்ராஷனம் (குடிநீர்), புனர்-மார்ஜனம் (கூடுதல் தெளித்தல்) மற்றும் அர்க்ய-பிரதானம் (தண்ணீர் வழங்குதல்) போன்ற முக்கிய கூறுகள் பெரும்பாலும் அப்படியே இருக்கின்றன.
|
Portal di Ensiklopedia Dunia