சாபி அப்டால்
டத்தோ ஸ்ரீ பாங்லிமா சாபி அப்டால் (ஆங்கிலம்; மலாய்: Mohd Shafie bin Apdal; சீனம்: 赛夫丁纳苏迪安; சாவி: محمد ساڤي بن أفضل; (பிறப்பு: 20 அக்டோபர் 1956) என்பவர் 2018 மே மாதம் முதல் 2020 செப்டம்பர் மாதம் வரை மலேசியா, சபா மாநிலத்தின் 15-ஆவது சபா முதலமைச்சர் பதவி வகித்தவர் ஆகும். சபா மாநிலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு 2016 அக்டோபர் 17-ஆம் தேதி சபா பாரம்பரிய கட்சி (ஆங்கிலம்: Sabah Heritage Party மலாய்: Parti Warisan Sabah) எனும் கட்சியை சாபி அப்டால் உருவாக்கினார். அந்தக் கட்சியின் தலைவராக தலைமை தாங்கி வருகிறார். 1995-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து சபா, செம்பூர்ணா மக்களவைத் தொகுதியின் (Semporna Federal Constituency) மலேசிய மக்களவை உறுப்பினராக (MP) பொறுப்பு வகிக்கும் இவர் மலேசிய அமைச்சரவையில் பல்வேறு அமைச்சுகளிலும் பணியாற்றியவர் ஆவார். பொதுமலேசிய நாடாளுமன்றம்; மலேசிய மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஆகியவற்றில் சாபி அப்டால் வகித்த பதவிகள்: சபா முதலமைச்சர் பதவி
நாடாளுமன்றச் செயலாளர் பதவி
துணை அமைச்சர் பதவிகள்
அமைச்சர் பதவிகள்
மலேசிய மக்களவை
சபா மாநில சட்டமன்றம்
வாழ்க்கை வரலாறுமுகமது சாபி அப்டால் 1956-ஆம் ஆண்டு மலேசியா, சபா, செம்பூர்ணா மாவட்டம், செம்பூர்ணாவில் (Semporna) பஜாவு மக்கள் (Bajau) வம்சாவளி குடும்பத்தில் பிறந்தார். சபாவின் எட்டாவது முதலமைச்சராகவும்; அதன் முன்னாள் ஆளுநராகவும் இருந்த சக்காரான் டன்டாய் (Sakaran Dandai) என்பவரின் ஒன்றுவிட்ட மகன் (Nephew) ஆவார்.[2] சாபி அப்டால் தன் இடைநிலைக் கல்வியை கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா கல்விக் கழகத்தில் (Victoria Institution) முடித்தார். மேலும் தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை கோத்தா கினபாலுவில் உள்ள சபா கல்லூரியில் பயின்றார். பின்னர் லண்டன் வணிகக் கல்லூரியில் (London Business College) கப்பல் மேலாண்மைத் துறையில் பட்டயம் படிப்பைப் பெற்றார். 1992 இல், இங்கிலாந்தின் இசுடாபோர்ட்சயர் பல்கலைக்கழகத்தில் (Staffordshire University), பொருளாதாரத்தில் இளங்கலை பெற்றார். அரசியல்சாபி அப்டால் தன் அரசியல் வாழ்க்கையை ஐக்கிய சபா தேசிய அமைப்பு கட்சியின் (USNO) மூலம் தொடங்கினார். அந்தக் கட்சி 1994-இல் கலைக்கப்பட்டது. அதன் பின்னர் சாபி அப்டால் அம்னோவில் இணைந்தார். 1995-இல் அவர் செம்பூர்ணா மக்களவைத் தொகுதி (Semporna Federal Constituency) அம்னோ உறுப்பினராக மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். விருதுகள்மலேசிய விருதுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia