பி. கே. எஸ். அய்யங்கார்
பே. கி. சு. அய்யங்கார் அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்திரராஜ அய்யங்கார் (B. K. S. Iyengar)(திசம்பர் 14, 1918 - ஆகத்து 20, 2014)[1][2][3] ஐயங்கார் யோகா நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். இவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள், யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். இளமைக் காலம்பே. கி. சு. அய்யங்கார், பில்லூர், கர்நாடகாவில் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.[4]. அவரது தந்தை பெயர் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார், அவர் ஓர் ஆசிரியர், தாயார் சேசம்மா. இவர்களுக்குப் பிறந்த 13 குழந்தைகளில் 11வது குழந்தை அய்யங்கார்.[5] இவருக்கு ஐந்து வயதிருக்கும் பொழுது அவரது குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது. யோகக் கல்வி1934ல் பே. கி. சு. அய்யங்காரின் மைத்துனர் ஸ்ரீ திருமலை கிருஷ்ணமாச்சார்யா அய்யங்காரின் யோகப் பயிற்சியின் மூலம் உடல்நிலையில் முன்னேற்றம் காண்பதற்காக மைசூர் அழைத்துச் சென்றார். அங்கே அவர் பயின்ற ஆசன பயிற்சிகள் அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் தந்தது. கிருஷ்ணமாச்சார்யா பே. கி. சு. அய்யங்கார் மற்றும் பிற மாணவர்களைக் கொண்டு மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் யோகாவினை நிகழ்த்திக் காட்டினார். இது பே. கி. சு. அய்யங்கார் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.[5] 18 வயது நிரம்பிய பி. கே. எஸ். ஐயங்கார் ஸ்ரீகிருஷ்ணாமாச்சாரியாவால் உற்சாகமளிக்கப்பட 1937ல் யோகா கற்று புனே சென்றார். அவர் யோகாவின் பல்வேறு நுட்பங்களைப் பரிசோதனை செய்ய ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் செலவிட்டார். விருதுகள், கௌரவங்கள்அவர் 1991 ல் பத்மசிறீ விருதும், 2002ல் பத்ம பூசண் மற்றும் 2014ல் பத்ம விபூசண் விருதும் பெற்றார். 2004-ல் நூறு செல்வாக்கு மிகுந்தவர்கள் என்னும் பட்டியலில் பே. கி. சு. அய்யங்காரரும் ஒருவராக டைம் இதழ் அவரைக் கௌரவித்தது. 2001-ல் சீன அரசு அஞ்சல் துறை இவரைக் கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட்டது.[6][7] வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia