புத்ராஜெயா மக்களவைத் தொகுதி
புத்ராஜெயா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Putrajaya; ஆங்கிலம்: Putrajaya Federal Constituency; சீனம்: 布城国会议席) என்பது மலேசியா, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P125) ஆகும்.[5] புத்ராஜெயா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து புத்ராஜெயா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] புத்ராஜெயாபுத்ராஜெயா, திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஒரு நவீன நகரமாகும். 1999-ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் நிருவாகத் தலைநகரமாகச் செயல்படுகிறது.[7] அதிகாரப்பூர்வமாக புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசம் (Federal Territory of Putrajaya) என்று அழைக்கப்படுகிறது. 1975-ஆம் ஆண்டு வரை புத்ராஜெயா புறநகர்ப் பகுதி உலு லங்காட் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டது. பின்னர் காஜாங் மாவட்டத்தின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டது. 2001 பிப்ரவரி 1-ஆம் தேதி புத்ராஜெயா மலேசியாவின் மூன்றாவது கூட்டரசுப் பிரதேசமாக மாறியது. இதற்கு முன்னர், 1974-ஆம் ஆண்டில் கோலாலம்பூர் முதல் கூட்டரசுப் பிரதேசமாகவும்; அடுத்து 1984-ஆம் ஆண்டில் லபுவான் இரண்டாவது கூட்டரசுப் பிரதேசமாகவும் மாறின. கோலாலம்பூர் மாநகருக்கு தெற்கே அமைந்துள்ள இந்தப் புத்ராஜெயா நிருவாக நகரம், மலேசிய அரசாங்கத்தின் அலுவல் மையமாகத் திகழ்கிறது. 2005-ஆம் ஆண்டு முதல் மலேசிய நடுவண் அரசின் அனைத்து அமைச்சுகளும் கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து புத்ராஜெயாவிற்கு மாற்றம் செய்யப் பட்டன. புத்ராஜெயா மக்களவைத் தொகுதி
புத்ராஜெயா தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia